Wednesday, March 28, 2012

குமரன் பிறந்தநாள்! - தமிழில்...அதரம் மதுரம் வதனம் மதுரம்!

நேற்று ((Mar 28)...
பதிவுலக ஆன்மீக சூப்பர் ஸ்டார் என ஒளிர் - குமரன் அண்ணாவின் பிறந்த நாள்!

குமரன், மற்றும் அவர் செல்ல மகளுக்கும்...
...நான்-முருகவன் சார்பாகவும்,
அனைவர் சார்பாகவும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

இனிய பிறந்தநாளிலே - இனிய பரிசாக - இனியவை எட்டு!



சுத்தாத்வைத மகாகுரு, வல்லபாச்சார்யர் எழுதிய மதுராஷ்டகம் - அதரம் மதுரம்
- அதைத் தமிழ் வடிவமாக்கித் தருகிறேன் = இனியவை எட்டு

எம்.எஸ்.அம்மாவின் குரலில் இங்கே, கேட்டுக் கொண்டே வாசியுங்கள்!
மெட்டு மாறாமல் வருகிறதா என்றும் பார்த்துச் சொல்லவும்; நன்றி!

ஸ்ரீ-ஹரீ-ஓம்

(1) அதரம் மதுரம் வதனம் மதுரம் - நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் -  மதுராதிபதே ரகிலம் மதுரம்
இதழும் இனிதே! முகமும் இனிதே! -- கண்கள் இனிதே! சிரிப்பும் இனிதே!
இதயம் இனிதே! நடையும் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!
(2) வசனம் மதுரம் சரிதம் மதுரம் - வஸனம் மதுரம் லலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
சொல்லும் இனிதே! குணமும் இனிதே! -- உடைகள் இனிதே! உடலும் இனிதே!
இயக்கம் இனிதே! உலவல் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!
-----------------------
(3) வேணூர் மதுரோ ரேணூர் மதுர:  - பாணிர் மதுர: பாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
குழலும் இனிதே! கால் தூசி இனிதே! -- கைகள் இனிதே! பாதம் இனிதே!
நடனம் இனிதே! நட்பும் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

(4) கீதம் மதுரம் பீதம் மதுரம் - புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
பாடல் இனிதே! பட்டாடை இனிதே! -- உண்ணல் இனிதே! உறக்கம் இனிதே!
உருவம் இனிதே! திலகம் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!
-----------------------
(5) கரணம் மதுரம் தரணம் மதுரம் - ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம்
வமிதம் மதுரம் சமிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
சேட்டை இனிதே! வெற்றி இனிதே! -- கள்ளம் இனிதே! உள்ளம் இனிதே!
எச்சில் இனிதே! வெட்கம் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

(6) குஞ்ஜா மதுரா மாலா மதுரா - யமுனா மதுரா வீசீ மதுரா
ஸலிலம் மதுரம் கமலம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
மணிகள் இனிதே! மாலை இனிதே! -- யமுனை இனிதே! அலைகள் இனிதே!
தண்ணீர் இனிதே! தாமரை இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!
-----------------------

(7) கோபீ மதுரா லீலா மதுரா - யுக்தம் மதுரம் சிஷ்டம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
ஆய்ச்சி இனிதே! ஆட்டம் இனிதே! -- கூடல் இனிதே! குணமும் இனிதே!
பார்வை இனிதே! பாவனை இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

(8) கோபா மதுரா காவோ மதுரா - யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
ஆயர் இனிதே! ஆக்கள் இனிதே! -- செண்டை இனிதே! பிறவி இனிதே!
வீழல் இனிதே! ஆழல் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

இதி ஸ்ரீமத் வல்லபாச்சார்ய விரசித மதுராஷ்டகம் சம்பூர்ணம்
இங்ஙனம் வல்லபர் விளம்பிய இனியவை எட்டும் இனிதாய் நிறைவே!
-----------------------

பிற கலைஞர்களின் இசையில்:

Cinema:
*வாணி ஜெயராம் - கன்னடப் படத்தில் (மலைய மாருதா)

Classical:
*விஜய் யேசுதாஸ்
*யேசுதாஸ்

*மும்பை ஜெயஸ்ரீ
*அனுராதா பட்வால்

*Fusion
*குஜராத்தி-பஜன்

8 comments :

Kavinaya said...

KRS - ஸா? யார் இது புதுசா இருக்கு? ஆனா பாடல் ரொம்ப அழகா இருக்கு :)

குமரனுக்கு மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

ஷைலஜா said...

கவிநயா சொன்னமாதிரி யார் இந்த கே ஆர் எஸ்?:) எங்கயோ பார்த்த நினைவு.. ஏதோ பந்தல்ல தமிழ்விருந்து அளிப்பாரே அவரா?:)

குமரனுக்கு பல்லாண்டு பல்லாண்டு பலகாலம் நலம் வளமோடு வாழ வாழ்த்துகள்!

Lalitha Mittal said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குமரன் !

sury siva said...

அழகான அற்புதமான அமரிக்கையான அதிசயமான ஆகர்ஷிக்கும்படியான பாடல்
மொழிபெயர்ப்பு எனச் சொல்லிடுதல் இயலாது. மதுராதிபதே !! மதுரையின் தலைவா அப்படின்னு இருக்கலாமோ !!
சும்மா இரு. கண்ணபிரானுக்குத் தெரியாதது எதுவுமில்லை. கண்களை மூடிக்கொண்டு பாடலின் நயத்தில்
மனதைச் செலுத்து.

ஜேசுதாஸ் கானடாவில் பாடுகிறார். என்னையும் பாடத்தூண்டுகிறார்.

சுப்பு தாத்தா.

sury siva said...

http://youtu.be/JxrVYnRhOuI

in Raag kanada you can listen to the song so beautifully translated by Sri KRS

subbu rathinam

குமரன் (Kumaran) said...

நன்றி இரவி.

நன்றி கவிநயாக்கா, ஷைலஜாக்கா & லலிதாம்மா.

Radha said...

belated birthday wishes kumaran !

குமரன் (Kumaran) said...

Thanks Radha!

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP