Tuesday, December 22, 2009

6.கண்ணன் நடைபழகுதல்.



றங்கும் கதிரவன் வான விளிம்பைத்
திறந்துப் புரவிகள் தேரில் - இறங்கித்
திரைநீலம் யாவையும் தீயாக்கும் போலே
தரைமேல் குழந்தை தவழ்ந்து.

கொத்து மலர்களே கால்கொண்டு கைபதித்துத்
தத்தித்தத் தித்தண்ணீர்ச் சந்திரனாய் - முத்துக்கள்
சிந்திச் சிதறும் திசையெங்கும் சீதளபன்
உந்திபட ஊன்றித் தவழ்ந்து.

பாக்கியம் செய்தன பாத விரல்களின்
நோக்கிய மென்மை நகங்களே - ஆக்கிய
கோடுகள் நந்தன் நிலத்தில் நான்காகத்
தோடுகள் அசையத் தவழ்ந்து.

***

Image Courtesy :: http://members.rediff.com/sirparetn/res/kanna.jpg

3 comments :

தமிழ் said...

அருமையாக எழுதி யுள்ளீர்கள்

வாழ்த்துகள்

இரா. வசந்த குமார். said...

அன்பு திகழ்...

நன்றிகள்.

குமரன் (Kumaran) said...

தத்தித் தத்தித் தவழும் கண்ணன் நடை பழகும் விதம் அருமை.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP