Wednesday, December 03, 2008

பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை பாடிடுக மூடமதியே!

சிறுவயதில் நிறைய தடவை இந்தப் பாடலின் அழகில் மயங்கிக் கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறேன். அப்போதெல்லாம் யார் எழுதியது, யார் பாடியது என்றெல்லாம் தெரியாது. இது ஒரு முதன்மையான வடமொழித் துதி நூலின் மொழிபெயர்ப்பு என்றும் தெரியாது.

அன்று பெற்ற அமைதி இன்றைக்கும் இந்தப் பாடலைக் கேட்கும் போது கிடைக்கிறது. நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

இயற்றியவர் (மொழிபெயர்த்தவர்): கவியரசர் கண்ணதாசன்
இசையமைத்துப் பாடியவர்: மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்




பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை பாடிடுக மூடமதியே!
பாடுவதில் தீர்ந்துவிடும் பழி பாவம் அத்தனையும் பரந்தாமன் சொன்ன விதியே!

(பாடிடுக பாடிடுக)

பாடுவதை விட்டுவிட்டுப் பாணினி இலக்கணத்தைப் பற்றுவதில் நன்மை வருமோ?
பாய் விரித்த வேளை தனில் காலனவன் சன்னிதியில் பாணினியம் காவல் வருமோ?

(பாடிடுக பாடிடுக)

மாடு மனை தேடுவதும் வல்ல நிலை கூடுவதும் வாலிபம் இருக்கும் வரை தான்!
வாசமொடு பாசமொடு வந்துறவு நாடுவதும் வரவுகள் நிலைக்கும் வரை தான்!
ஓடி விடும் மேனிதனில் கோடி நரை தோன்றிய பின் கூடுவது என்ன சுகமோ?
கூடும் விறகோடு வெறும் கூடு என வீழ்ந்த பி(ன்)னர் கோவணமும் கூட வருமோ?

நாடிவிடு கண்ணன் அடி! தேடிவிடு கண்ணன் புகழ்! நண்ணுவது அந்த சுகமே!
நாயகனை மாயவனை தூயவனை மாலவனை நல்லவனைப் பாடு மனமே!

(பாடிடுக பாடிடுக)

32 comments :

Raghav said...

ரொம்ப நாள் கழித்து பரந்தாமன் மெய்ப்புகழை கேட்க தந்தமைக்கு நன்றி குமரன்.. எங்க ஊர்க் கோவிலில் தினமும் இந்தப் பாடல் உண்டு.

Raghav said...

குமரன், பாணினி இலக்கணம் அப்புடின்னா என்ன? கொஞ்சம் விளக்குங்களேன்..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இது ஒரு முதன்மையான வடமொழித் துதி நூலின் மொழிபெயர்ப்பு என்றும் தெரியாது//

இப்படிச் சொல்லிட்டு போயிட்டாப் போதுமா?
அது என்ன துதி நூலின் மொழிபெயர்ப்பு-ன்னு சொன்னா தானே எங்களுக்கும் தெரியும்!
சொல்லுங்க குமரன், சொல்லுங்க! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கூடும் விறகோடு வெறும்
கூடு என வீழ்ந்த பி(ன்)னர்
கோவணமும் கூட வருமோ?//

சான்சே இல்ல! கண்ணதாசன் கண்ணதாசன் தான்! :)

//நாடிவிடு கண்ணன் அடி!
தேடிவிடு கண்ணன் புகழ்!
நண்ணுவது அந்த சுகமே!//

கண்ணன் கழலினை
நண்ணும் மனமுடையீர்
-ன்னு மாறனைப் போலவே நண்ணச் சொல்றாரு!

//நல்லவனைப் பாடு மனமே!//

நல்லவனா?
ஓ...ஓங்கி உலகளந்த உத்தமனா? :)

எம்.எஸ்.வி குரலும் பாட்டுக்கு ஒரு கம்பீரம் தான் குமரன்!
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம்-ன்னு இன்னொரு எம்.எஸ்.வி பாட்டையும் இடுமாறு கண்ணன் பாட்டு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்!

குமரன் (Kumaran) said...

நீங்க வந்து சொல்லுவீங்கன்னு நெனைச்சுக்கிட்டுத் தான் சொல்லாம விட்டேன் இரவி. சொல்லுங்க. அப்படியே பாணினி இலக்கணம்ன்னா என்னன்னும் இராகவுக்கு சொல்லுங்க. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
நீங்க வந்து சொல்லுவீங்கன்னு நெனைச்சுக்கிட்டுத் தான் சொல்லாம விட்டேன் இரவி. சொல்லுங்க//

இது என்ன வம்பாப் போச்சு! எனக்கென்ன தெரியும்! வடை மொழி-ன்னு வேற சொல்றீங்க! பதிவுலகம் ஃபுல்லா வேற ஒரே இட்லி-வடை மொழியா இருக்கு! :)

//அப்படியே பாணினி இலக்கணம்ன்னா என்னன்னும் இராகவுக்கு சொல்லுங்க. :-)//

பாணினியா? அப்படீன்னா?
Banana theriyum
Banyan theriyum
Baniyan theriyum
Banini theriaathe!
:)
ஏம்பா ராகவ், வந்து கேளேன்-பா!

jeevagv said...

நல்லா இருந்தது பாடல் குமரன், வழங்கியமைக்கு நன்றிகள்.

If
Sanskrit === Thamiz,
Then
பாணினி === தொல்காப்பியர்
!

http://en.wikipedia.org/wiki/P%C4%81%E1%B9%87ini

Raghav said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
பாணினியா? அப்படீன்னா?
Banana theriyum
Banyan theriyum
Baniyan theriyum
Banini theriaathe!
:)
ஏம்பா ராகவ், வந்து கேளேன்-பா //

பாவனா தான் தெரியும் பாணினி தெரியாது :)

Raghav said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...
!
http://en.wikipedia.org/wiki/P%C4%81%E1%B9%87ini //

நன்றி ஜீவா.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ராகவ்
பாய் விரித்த வேளை தனில் காலனவன் சன்னிதியில் = ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே

பாணினியம் காவல் வருமோ? = நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே

பாடிடுக பாடிடுக = பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்

பரந்தாமன் மெய்ப்புகழை பாடிடுக மூடமதியே! = கோவிந்தம் பஜ மூடமதே

Kannabiran, Ravi Shankar (KRS) said...

'டுக்ருங்கரணே' என்பது பாணிணிய இலக்கண வாசகம் போலும்!

ஒரு ஞானி(?) டுக்ருங்கரணே, டுக்ருங்கரணே-ன்னு இலக்கணப் பாடத்தைச் சாதகம் செய்து கொண்டிருந்தார் காசியில்!

பகவத் ப்ரீதியை (இறையன்பை) மனத்தில் வளர்த்துக் கொள்ளாது, வெறுமனே சுலோகங்களும், கர்ம சிரேஷ்டங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து,
ஆனால் அந்த சுலோகங்களின் சாரமானதைச் சொந்த சுயநலத்தில் மறந்து போனால் என்னவாகும்?

மோட்சம் வேண்டுமா? டுக்ருங்கரணே சொல்லுவோம்!
வேற ஒன்னு வேணுமா? இன்னொரு கரணே சொல்லுவோம்!
இப்படி இதிலும் கூட சுயநலமும், சுயபிரதாபங்களும் கலந்து, தன்னை முன்னுக்குத் தள்ளி, இறைவனைப் பின்னுக்குத் தள்ளினால்?

இந்த முதியவர், இனி மேல் இலக்கணத்தை எல்லாம் நெட்டுரு போட்டுத் தானா இறையன்பைப் பெறப் போகிறார்? ஒப்புக்கு ஒரு லட்சம் முறை பாராயணம் செய்வதை விட, மானசீகமாக பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் என்று ரெண்டு சொட்டு கண்ணீர் இவரைக் கடைத்தேற்றாதா?

இந்த எண்ணம் தோன்றித் தான் ஆதிசங்கர பகவத்பாதாள், "நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே" என்று நம் அத்தனை பேர் மண்டையிலும் ஒரே போடாக போடுகிறார்! :)

I just love Sankarar! :))

குமரன் (Kumaran) said...

ரொம்ப நன்றி இரவிசங்கர். பாருங்க எப்படி வெளுத்துக் கட்றீங்ன்னு. :-)

இராகவ், இப்ப முழுப்பாடலும் புரியுதா?

புரியாட்டி இங்கே தேடிப் பாருங்க.

http://sthothramaalaa.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

குமரன் (Kumaran) said...

//பாட்டையும் இடுமாறு கண்ணன் பாட்டு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்!//

அப்ப நீங்க யாரு? :-)

குமரன் (Kumaran) said...

சரியா சொன்னீங்க ஜீவா. நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
//பாட்டையும் இடுமாறு கண்ணன் பாட்டு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்!//

அப்ப நீங்க யாரு? :-)//

நான் ஒரு வெள்ளாடு! :)

ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும் போது....மந்தையில் இருந்து....
:)

குமரன் (Kumaran) said...

நாம் எல்லோரும் அது தானே இரவி. ஆடுகள் தம்மை ஆடுகள் என்று உணரும் போது மந்தையிலிருந்து விலக வேண்டாம். மேய்ப்பானிடம் சேர்ந்தாலே நல்லது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
ஆடுகள் தம்மை ஆடுகள் என்று உணரும் போது மந்தையிலிருந்து விலக வேண்டாம். மேய்ப்பானிடம் சேர்ந்தாலே நல்லது//

ஹா ஹா ஹா
மந்தையில் விலகினால் தான் எந்தையில் சேர முடியுமாம் - என் குருநாதர் சொல்லீருக்காரு! :)

Kavinaya said...

//கூடும் விறகோடு வெறும் கூடு என வீழ்ந்த பி(ன்)னர் கோவணமும் கூட வருமோ?//

ரொம்பப் பிடித்த வரி -

இனிமையான, பொருள் மிகுந்த பாடலுக்கு நன்றி குமரா.

குமரன் (Kumaran) said...

நன்றி கவிநயா அக்கா.

S.Muruganandam said...

பஜகோவிந்தத்தின் தமிழ் மொழிபெய்ர்ப்பு போல உள்ளது.

அருமையான பாட்டுக்கும் ஏழுமலையான் தரிசனத்திற்க்கும் நன்றி குமரன்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் கைலாஷி ஐயா. பஜகோவிந்தத்தின் மொழிபெயர்ப்பு தான்.

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர்.

இந்தப் பதிவிலும் தேன்கூட்டுப் படிவம் இருக்கும் போல் தோன்றுகிறது. இங்கும் பின்னூட்டப் பகுதி திறக்க நேரமாகிறது. நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

ஷைலஜா said...

நல்லபாடல் குமரன் கேட்டதே இல்ல இதுவரைக்கும்....பதிவுக்கும் தாமதமாய்வந்து ஆனா உடனே கேட்டுட்டேன் நன்றி!

குமரன் (Kumaran) said...

ரொம்ப மகிழ்ச்சி வெட்கம்வெட்கம் (ஷை+லஜ்ஜா) அக்கா. :-)

Anonymous said...

Very Nice

குமரன் (Kumaran) said...

நன்றி ஜோதி.

Anonymous said...

Hello,nice post thanks for sharing?. I just joined and I am going to catch up by reading for a while. I hope I can join in soon.

manoharvarma said...

அற்புதமான பதிவு மற்றும் அற்புதமான கருத்துகள் மிகவும் பயனுள்ளளதாக இருந்தது அனைவர்க்கும் நன்றிகள் !

drmaha1962 said...

Yes சமஸ்கிருத வடமொழி இலக்கணம் !

Anonymous said...

Panini was a scholar, who wrote books on grammer... The word meaning is paninis grammer...

Poet wrote this song inspired by bhaja govindam, by sankaracharyarv

Anonymous said...

// 'ஓடி விடும்' மேனிதனில்...//

Should be

'Kodu Vizhum' Menithannil kodi Narai Thonriyapin....

Anonymous said...

தமிழில் அகத்தியர் மற்றும் தொல்காப்பியர் போல, பாணினி வடமொழி இலக்கண ஆசிரியர். அவரது இலக்கண நூல் பாணினியம்.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP