Wednesday, November 12, 2008

ஆடி வரார்.. ஓடி வரார் வரதராஜப் பெருமாள்


என்ன இது.. இத்தனை பேரு மஞ்சள் ஆடை உடுத்தி எம்பெருமான் திருச்சின்னங்களை கையில் ஏந்திக் கொண்டு.. பாத்தா கோவில் வாசல்ல யாருக்கோ வரவேற்பு கொடுப்பதற்காக நிக்கிறாங்களோன்னு நினைக்கிறீங்களா ?

அதான் இல்லை.. இவங்கெல்லாம் ஒரு ஐந்து நாள் எமனேஸ்வரம் ஊரை விட்டு ஊர் சுத்தப் போறாங்க.. யாரோட சுத்தப் போறாங்கன்னு கேக்குறீங்களா.. இதோ கீழ இருக்கார் பாருங்க.. அவரோட தான்

பெருந்தேவி மணாளன்.. தேவர் பிரான்.. பேரருளாளன்.. ஸ்ரீவரதராஜன்..

எங்க ஊர் வரதராஜனை பற்றி எழுதலாம்னு உக்காந்தப்போ சில நாள் முன்பு கேட்ட திருச்சின்னமாலை ஞாபகம் வந்தது..

அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்

என்று ஸ்ரீமத் வேதாந்த தேசிகர், பேரருளாளனை அழகுற வர்ணித்திருப்பார். பேரருளாளனை உடனே தரிசிக்கணும்னு மனதில் ஆசை.. அப்புறம் என்ன.. உடனே பஸ்ஸை பிடிச்சு கிளம்பிட்டோம்ல.. அந்த திவ்யமான அனுபவம் இன்னொரு நாள் சொல்லுறேன்.


சாமிக்கு கோவில் கட்டி, நித்யப்படி பூஜையும் செஞ்சு.. முக்கிய தினங்களில் வீதி உலாவும் பண்ணுறோம்.. இருந்தும் ஸ்ரீவரதராஜன், ஒரு 5 நாள் சேந்தாப்புல ஊர் சுத்தணும்கிறார்.. எதுக்காம்??

காரணன்.. காரியம் இரண்டுமாகி இருப்பவன் ஆயிற்றே..
காரணமில்லாமலா, வெளியில் கிளம்புவார்.. துர்வாச முனிவரால் சபிக்கப்பட்டு மண்டூகமாக மாறி இருந்த சுதபஸ் என்ற முனிவருக்கு சாப விமோசனம் தர வேண்டியே இந்த விஜயம்

எமனேஸ்வரத்தில் மிகச் சிறப்பான திருவிழா.. திருவிழா நடக்கும் 18 நாட்களும் ஊரே கொண்டாட்டமா இருக்கும். அழகரை “அழகரப்பன்” என்று செளராஷ்ட்ர மக்கள் அழைப்பர்.


மேல உள்ள படத்துல தெரியற அர்ச்சகர் யாரா இருக்கும்னு சொன்னா.. அவர்களுக்கு அடையார் ஆனந்த பவனில் ஒரு கிலோ மை.பா வாங்கி அனுப்பப்படும் :).



புறப்படுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள், பயணத் திட்டம் யார் யாருக்கு என்ன பொறுப்பு எல்லாம் விஷ்வக்‌ஷேனர் ஆகிய சேனை முதலி தயாரா வைச்சிருக்கார்.

பயணத்திட்டத்தின் படி.. அதிகாலை கள்ளர் திருக்கோலத்துடன்.. புஷ்பப் பல்லக்கில் ஏறி.. பெருந்தேவி தாயாரிடமும், சக்கரத்தாழ்வானிடமும் மற்றும் முக்கியமாக காவல் தெய்வம் கருப்பண்ண சுவாமியிடமும் விடை பெற்றுக் கொண்டு,

பக்தர்கள் தீவட்டி ஏந்திக் கொண்டும்.. தோளுக்கினியானை தோளில் சுமந்தபடி. ஆடியும் பாடியும் ஓடியும் ஆரோகணித்துக் கிளம்புகின்றார்.

எந்த வருடமும் தவற விடாத.. என் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும்.. ஊரார் அனைவரும் மிக்க சந்தோஷத்துடனும்.. பக்தியுடனும் எம்பெருமான்.. பேரருளாளன்.. வரதனை.. அழகனை கொண்டாடும்.. இப்பாடலை கண்டு களிப்போமா..





புஷ்பப் பல்லக்கு அசைந்தாடி வர.. குதூகலத்துடன்.. கோவிந்தா.. ஹரி என்ற கோஷம் முழங்க.. ஒரு துள்ளலுடன் எழுந்தருளுகிறார் வரதன்.



புஷ்பத்தின் மணங்களுடன்.. காலை குளிரில் பக்தர்களின் மரியாதைகளை ஏற்றுக் கொண்டு.. ஆற்றில் இறங்க தயாராகிறார்..

சரி.. இனி பாடலுடன் எம்பெருமான் ஆடலையும் பாப்போமா..

ஆடி வரார் ஓடி வரார் அழகழகாய்
அசைந்து வரார் வரதராஜ பெருமாள்
நம்மை வாழவைக்கும் திருமால்
அவர் கள்ளழகர் கோலத்திலே களிப்புடனே வருவார்..

கோவிந்த கோவிந்த கோவிந்தா.. ஹரி
கோவிந்த கோவிந்த கோவிந்தா..

வைகாசி மாசத்திலே பிரம்மோத்ஸவம் பாரு
அந்த வைபவத்தில் காட்சி தரும் வாகனங்கள் பாரு..

கல்யாண வைபவத்தில் வரதராஜனைப் பாரு..
கல்யாண வைபவத்தில் வரதராஜனைப் பாரு..
நாம் வடம்பிடித்து வலம் வருகின்ற தேரோட்டம் பாரு

ஆடி வரார் ஓடி வரார் அழகழகாய்
அசைந்து வரார் வரதராஜ பெருமாள்
நம்மை வாழவைக்கும் திருமால்
அவர் கள்ளழகர் கோலத்திலே களிப்புடனே வருவார்..

கோவிந்த கோவிந்த கோவிந்தா.. ஹரி
கோவிந்த கோவிந்த கோவிந்தா..


வஸந்தோத்ஸவ வைபவத்தில் வாண வேடிக்கை பாரு..
பூ பல்லாக்கிலே பவனி வரும் கள்ளழகரை பாரு..

கோவிந்த கோவிந்த கோவிந்தா.. ஹரி
கோவிந்த கோவிந்த கோவிந்தா..


அதிர்வேட்டு சத்தத்திலே தீவட்டி வெளிச்சத்திலே
அதிர்வேட்டு சத்தத்திலே தீவட்டி வெளிச்சத்திலே

ஐந்தடுக்கு வாத்தியங்கள் இஷ்டத்துக்கு முழங்குது பார்..


ஆடி வரார் ஓடி வரார் அழகழகாய்
அசைந்து வரார் வரதராஜ பெருமாள்
நம்மை வாழவைக்கும் திருமால்
அவர் கள்ளழகர் கோலத்திலே களிப்புடனே வருவார்..

கருப்பண்ண சுவாமியிடம் காவல் காக்க சொல்லி
தான் கைபிடித்த தேவியிடம் தைரியத்தை சொல்லி

வைகையிலே இறங்குகிறார் வட்ட நிலா ஜொலிக்க
வைகையிலே இறங்குகிறார் வட்ட நிலா ஜொலிக்க

அவர் கள்ளழகர் கோலத்திலே தல்லாகுளம் போய் அமர்வார்..

ஆடி வரார்..

தங்க நிற குதிரையிலே கள்ளழகரை பாரு
அவர் தங்கமென ஜொலித்து நிற்கும் வண்ணவராம் பாரு

சொர்ணமய சப்பரத்தில் சொர்க்க வாசல் பாரு

சொர்ணமய சப்பரத்தில் சொர்க்க வாசல் பாரு

நம்ம வரதராஜப் பெருமாளும் வண்டியூரில் அமர்வாரு..


ஆடி வரார்..


மண்டூக மகரிஷிக்கு மோட்சம் தரார் பாரு
அந்த மண்டகப்படியில் எழுந்தருளி தசவதாரம் பாரு..


கோவிந்தா கோவிந்தா... கோவிந்தோவ்..


நகரெங்கும் வலம் வருகின்ற நாராயணனை.. நம் வரதராஜனை தரிசித்து மகிழுங்கள்.


பேரருளாளன் அருள்வானாக.. மூன்று அழகர்களை பற்றி சொல்லலாம் என்று நினைத்துள்ளேன்.. அடுத்ததா.. பரமக்குடி சுந்தரராஜனையும்.. இறுதியாக.. சோலைமலை அழகனையும் வரும் வாரங்களில் பார்ப்போம்.


பாடல் எழுதி பாடியவர்: திரு. குங்கா. கே. நாகநாத அய்யர் அவர்கள் குழு, எமனை.






Sunday, November 09, 2008

கே.பி.சுந்தராம்பாள் கண்ணன் பாட்டு பாடுவாங்களா? ராதா சமேதா கிருஷ்ணா!

வாங்க மக்கா, கண்ணன் பாட்டு வலைப்பூவில் பாட்டு போட்டே ரொம்ப நாள் ஆவுது! எவ்வளவு நாள் தான் கண்ணன் ரொமான்ஸ் மட்டுமே பண்ணிக்கிட்டு இருக்க முடியும்? அப்பப்போ பாட்டும் கேக்கணும்-ல?

கண்ணன் பாட்டு நூறாம் பதிவுக் கொண்டாட்டம்-ன்னு சொல்லிட்டு, அது முடிஞ்சவுடன் குமரன் கிட்ட கண்ணனைக் கொடுத்துட்டு, நடையைக் கட்டிறலாம்-னு பார்த்தேன்!
நொங்-ன்னு ஒரு குட்டு, புல்லாங்குழல்-லயே!
அடிங்க...ன்னு வாய் வந்திரிச்சி! திரும்பிப் பாத்தா....

ராதை...ஓ அடிச்சது ராதையா?
அப்படின்னா பரவாயில்லை! அந்த மாட்டுக்காரப் பையன் கண்ணன் தான் கைய வச்சானோ-ன்னு நினைச்சேன்! ராதா சமேதா கிருஷ்ணா-ன்னா ஓக்கே தான்! :)

கம்பீரக் குரல் அரசி, அம்மா, கேபி சுந்தராம்பாள் முருகன் பாட்டு பாடுவாங்க! கலக்குவாங்க! தெரியும்! கண்ணன் பாட்டு பாடுவாங்களோ? இல்லீன்னா...முருகனை அல்லால் வேறோர் குறுகனைப் பாட மாட்டேன்-ன்னு சொல்லிருவாங்களோ??
சேச்சே! அம்மையாருக்கு கனிவான மனசு! கண்ணக் குழந்தையை விரும்பாதாவரும் உண்டோ?

இந்தப் பாட்டு சினிமா, ரீ-மிக்ஸ், Fusion, கச்சேரி-ன்னு எல்லா இடத்திலேயும் பிரபலம்!
ஏன்னா ரொம்ப ரொம்ப சின்னப் பாட்டு!
அதே சமயம் வெஸ்டர்ன் இஷ்டைல்-ல, வேகமா வரும் பாட்டு! Band Music போல களை கட்டும் பாட்டு!
கேளுங்க, கே.பி.எஸ் குரலில்!

அப்படியே, ஒரு Fusion! சாக்ஸபோன்-கத்ரி கோபால்நாத் (DONT MISS!!!)



(எடுப்பு)
ராதா சமேதா கிருஷ்ணா
(ராதா சமேதா)

(தொடுப்பு)
நந்த குமார நவநீத சோரா
பிருந்தா வன கோவிந்த முராரே

(ராதா சமேதா)

(முடிப்பு)
கோபி மனோகர கோகுல வாச
ஷோபித முரளீ கான விலாசா
சுந்தர மன்மத கோடிப் பிரகாசா
(ராதா சமேதா)

ராகம்: மிஸ்ர யாமன்
தாளம்: ஆதி
வரிகள்: ?
குரல்: கேபி சுந்தராம்பாள்


அதே பாடல், பலரின் கைவண்ணத்தில்:

* GNB-GN பாலசுப்ரமணியன் -- (ஷைலஜா அக்காவின் நட்சத்திர ஆணைப்படி!)

* MLV-எம்.எல்.வசந்தகுமாரி, பழைய தமிழ்த் திரைப்படத்தில்

* உன்னி கிருஷ்ணன்

* பம்பாய் சகோதரிகள்

* வயலின்-குன்னக்குடி வைத்தியநாதன்

* வயலின்-கன்னியாகுமரி

* இளவரசர் ராம வர்மா (ஸ்வாதித் திருநாள் பரம்பரையில் வந்தவர்)


  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP