Saturday, August 23, 2008

கண்ணன் பிறந்த இரவு-1: நாத்திக ஆரரிரோ!

கண்ணன் பிறந்தநாள் இன்று இரவு! எத்தனையோ தாலாட்டுகள் பின்னாளில் பாடினாலும், குழந்தையின் முதல் தாலாட்டு, மோகனத் தாலாட்டு அல்லவா? அதுவும் அதை நாத்திகக் கருத்து கொண்டவர் எழுதிப் பாடினால்?
அனைவரையும் வம்பிழுக்க வந்த குழந்தைக்கு ஆத்திகமாவது? நாத்திகமாவது? எல்லாருமே அதற்கு வெண்ணெய் தான்! :)

இந்த இரவு மிகவும் கடினமான இரவு, குழந்தைக்கு!
சிறை விட்டு, ஆற்றைக் கடந்து, ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து, இடி மின்னல், புயல் மழையில்...
பிறந்ததுமே அதற்குப் பயணம் தொடங்கி விட்டது!
உலகத்தையே பயணிக்க வைக்கும் குழந்தை, இன்று, தானே பயணிக்கிறது!
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒர் இரவில், ஒருத்தி மகனாய் வளர, விதிப்பவன் தனக்கே விதித்துக் கொண்டான்!!

கண்ணனை, நாஸ்தி நாஸ்தி - இல்லை இல்லை! என்று சொன்ன ஒருவன், தூண் முழுதும் தேடினான்! இன்னொருவன் ஊர் முழுதும் தேடினான்!
நாஸ்தி நாஸ்தி என்பவர்களும் அண்ணலிடம் காட்டும் ஆஸ்தி அலாதியானது! :)
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே! எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே!(மங்களமே)!!

இன்று கண்ணக் குழந்தைக்குத் தாலாட்டு பாடுபவர் யார்?
கவிஞர் வைர-முத்து! படம் சிப்பிக்குள்-முத்து! :)
கவிஞர் பகுத்தறிவுக் கவிஞர் தான்! ஆனால் பாசத்தில் குறை வைத்தாரில்லை!

தேர்ந்த சொற்களை எளிமையாகப் போட்டு, தன்னையே தாயாக்கிக் கொள்கிறார், பெரியாழ்வார் வழியில்!
கெளசல்யை நானே! யசோதை நானே! மலையன்னை நானே! பார்வதியும் நானே!
அன்பான சொற்களைப் போட்டு, தன்னையே அடியார் ஆக்கிக் கொள்கிறார்!
ஆழ்வாரும் நானே! கம்பநாடன் நானே! வால்மீகி நானே! தியாகய்யர் நானே!
கவிஞர் வைரமுத்து அவர்களே! - இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

இதே பாடல், ஸ்வாதி முத்யம் என்ற தெலுங்கு படத்திலும் சிறப்பாக இருக்கும்! சுசீலாம்மாவின் தேன் குரலில், இன்று கண்ணக் குழந்தை பயணக் களைப்பு தீரத் தூங்கட்டும்!
இன்று இரவு இந்தத் தாலாட்டு! தொடர்ந்து மூன்று இரவுகள், மூன்று தாலாட்டுகளைத் தர முயல்கிறேன்!



அது சரி, லாலி என்றால் என்ன? ஆரிராரோ என்றால் என்ன?
தமிழகத் தாய்மார்கள் பெரும்பாலும் பாடுவது ஆரிராரோ! ஆனால் இந்தப் பாட்டில் வைரமுத்து இரண்டையுமே பாடித் தூங்க வைக்கிறார்!
லாலி, லாலி - கேட்க இங்கே சொடுக்கவும்.

kris2

லாலி லாலி லாலி லாலி!
லாலி லாலி லாலி லாலி!

வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி!
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி!
குறும்பான கண்ணனுக்குச் சுகமான லாலி!
ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி!

(வரம் தந்த சாமிக்கு)
ஆரிராரி ஆரிராரோ
ஆரிராரி ஆரிராரோ

கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே!
யது வம்ச வீரனுக்கு யசோதை நானே!
கரு யானை முகனுக்கு மலையன்னை நானே!
பார் போற்றும் முருகனுக்குப் பார்வதியும் நானே!

(வரம் தந்த சாமிக்கு)
ஆரிராரி ஆரிராரோ
ஆரிராரி ஆரிராரோ

ஆனந்தக் கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே!
ஸ்ரீராமன் பாட வந்த கம்ப நாடன் நானே!
ராம ராஜனுக்கு வால்மீகி நானே!
ஆகாய வண்னனுக்குத் தியாகைய்யர் நானே!

(வரம் தந்த சாமிக்கு)

115858699_771cce968c


ஆரி-ராரி ஆரி-ராரோ
ஆரி-ராரி ஆரி-ராரோ

யார் தவம் ஈந்து வந்துதித்தாய் இருநிலத்தில்?
யார் ஈந்தவன் நீ?

யார் ஈ? யார் ஈ? யார்-ஹரி-ரோ?
உன்னை
யார் ஈ? யார் ஈ? யார்-அறி-ரோ?
கண்ணா, யார்-அறி-வாரோ?
(இந்தப் பாடல் என்னைப் பல நினைவுகளுக்கு இட்டுச் செல்லும்! எத்தனை முறை பாடியிருப்பேன் என்று எனக்கே தெரியாது! இரவில் துவங்கிடும் இந்தப் பாடல், விடிய விடிய, விடிந்து, அலுவலகம் செல்லும் வரை ஒலித்த பாடல்! கண்ணைப் பார்த்து, ஆரி-ராரோ என்ற வாயசைப்புக்கே அமைதி வந்து விடும்!)


பாடல்: வரம் தந்த சாமிக்கு
படம்: சிப்பிக்குள் முத்து
வரிகள்: வைரமுத்து
இசை: இளையராஜா
குரல்: பி.சுசீலா

இது, இவர்கள் வீட்டுக் கண்ணன்! தொங்கக் கிருஷ்ணுடா நூவு? :)


ஸ்வாதி முத்யம் படத்தில்! (தமிழ் வீடியோ இருந்தா, யாராச்சும் கொடுங்கப்பா!)

11 comments :

Kavinaya said...

ஆஹா, அருமையான பாடல். எனக்கும் ரொம்பப் பிடிச்ச பாடல். நன்றி கண்ணா. தமிழ் வீடியோ இங்க பார்க்கலாம்:

http://www.rajcinemas.com/?p=2872

கானா பிரபா said...

கண்ணன் சிறப்பு பதிவுகள் செம கலக்கல்

sury siva said...

கண்ணன் அவன் கமலக்கண்ணன்.
செல்லக்கண்ணன். வெல்லக்கண்ணன்.
வெண்ணைக்கண்ணன்.
முத்துக்கண்ணன். பட்டுக்கண்ணன்.
மாயக்கண்ணன்.
அவன் இப்பதான் பிறந்திருக்கிறான்.
உடனே ஏனம்மா ஆராரோ ஆரிராரோ
பாடி தூங்க வைக்கிறீங்கம்மா !
கொஞ்சுங்கம்மா ! என்ன அழகு ! என்ன அழகு !!
அந்த கிருஷ்ணன் சுந்தர கிருஷ்ணன்
பாட்டை க்கேளுங்கம்மா !
http://www.musicindiaonline.com/p/x/mJx28aVxOET4J9wESIJjWWRM/


சுப்பு தாத்தா.
தஞ்சை.
http://pureaanmeekam.blogspot.com

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கவி அக்கா
டேங்கீஸ்! வீடியோவுக்கு!
நேத்து என்ன பலகாரம்? எனக்கு சீடை இன்னும் வரலியே? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@காபி அண்ணாச்சி
தாலாட்டு தொடருதம்மா! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@சூரி சார்
//அவன் இப்பதான் பிறந்திருக்கிறான்.
உடனே ஏனம்மா ஆராரோ ஆரிராரோ
பாடி தூங்க வைக்கிறீங்கம்மா !//

ராத்திரி பய புள்ள ஓயாம பயணம் செஞ்ச களைப்பு! அதான் இரவுத் தாலாட்டு!
ஆனா விடியட்டும்! தாலாட்டாவது ஒன்னாவது? கொஞ்சல் திருவிழா தான்! :)

கிருஷ்ணம் கலய சகி - பாட்டு சூப்பர்! சுட்டிக்கு நன்றி சார்!

jeevagv said...

எப்போதும் மனத்தை உருக்கும் பாடல் - பெரிய மகான்களை எல்லாம் பூக்களையாய் தொடுத்து மாலையாய் கட்டிய பாடல்!
அப்புறம், இது நீலாம்பரி இராகம் அல்லவா.

முகுந்தன் said...

தேன் போன்ற பாடல்,
என் மகன் தூங்கும் முன் நாங்கள் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று

Raghav said...

பிறந்த நாள் கொண்டாட்டம் அட்டகாசாமா போகுதே.. அறிவிக்கப்படாத நட்சத்திர வாரம் போல இருக்கு

கோவி.கண்ணன் said...

எப்போது கேட்டாலும் சொக்கவைக்கும் பாட்டு அது !

Vincent Hosea said...

தேன் போன்ற பாடல், என் மகன் தூங்கும் முன் நாங்கள் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP