Sunday, June 15, 2008

97. ஜிரா தரவேற்றிய நம்பியார் கண்ணன் பாட்டு!

தசாவதாரம் படத்துல நெப்போலியன், கமல் கிட்ட ரொம்ப பீலா விடுவான்! "உங்களைப் போல வைணவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பதை அறி-வோம்! உங்கள் குரு இராமானுசர் எங்கே ஓடிக் கொண்டு இருக்கிறார் என்பதையும் அறி-வோம்!"
இப்படி அறி-வோம், அறி-வோம் என்று சொல்ல...
அதுக்கு கமல், "மன்னா! உன் வாயாலேயே ஹரி-ஓம்! ஹரி-ஓம்! என்று வந்து விட்டது பார்த்தாயா?" என்று வார்த்தை விளையாட்டு வெளையாடுவாரு!

இதைப் பார்த்தாரு நம்ம ஜிரா!
அ"றி"-வோம் என்பதை ஹ"ரி"-ஓம் ன்னு ஆக்கினீல்ல கமலஹாசா?
இப்போ, ஹ"ரி"-ஓம் என்பதை ஹ"றி"-ஓம் ன்னு நானும் ஆக்குறேன் பாரு-ன்னு சவால் வுட்டாரு! ர-வில் இருந்து ற-வுக்கு மாறி, ந"ற"ந"ற"-ன்னு பதில் வெளையாட்டு விளையாடினாரு அவரோட சூப்பர் விமர்சனப் பதிவுல! :-)

இதைப் பார்த்துட்டு நானும்,
ஹரி-ஓம், ஹறி-ஓம், எதுவானாலும் சரி, ஆனா நாம இப்ப, Hurry ஓம்!
படத்தை முதல் காட்சியில் இருந்தே மிஸ் பண்ணாமப் பாக்கச் சொல்லி இருக்காரு இவரு!
அதனால் Hurry-ஓம்னு பதிலுக்கு விளையாடிக்கிட்டு இருந்தேன்! ஜிராவின் ஃபார்முலா படி, ராகவன் றாகவன் ஆனாரு! ஜிராவும் ஜிறா ஆனாரு! :-)))

ஆனால் நம்ம ஜிரா நிஜமாலுமே அப்படித் தானா? அதெல்லாம் சும்மா உல்லல்லுலாலாயி...
கண்ணன் மேலும்,
கண்ணன் பாட்டு மேலும்,
கண்ணன் அடியார் (கேஆரெஸ்) மேலும் அதீத பாசம் கொண்டவரு! நல்லவரு! வல்லவரு!:-)

பலரும் அறியாத மிக அபூர்வமான கண்ணன் பாடல்கள்! இணையத்தில் தேடினாலும் கிடைக்காத பாடல்கள் சிலவற்றை, எனக்காகவே yotube-இல் தரவேற்றினாரு!
அதில் ஒன்று தான் இன்னிக்கி கண்ணன் பாட்டில் நாம் கேட்கப் போகும் 97th கண்ணன் பாட்டு!



சுப்ரபாதம் என்றொரு படம் வந்துச்சி! இறையருட் செல்வர் கே.சங்கர் இயக்கிய படம்!

புராணக் கதைகளை வைத்தும், பக்திக் கதைகளை வைத்தும் படம் பண்ணினா, அதோ கதி தான் என்ற மாறுபட்ட காலத்தில், அதை உடைத்த பெருமக்கள் இருவர்! * ஏ.பி.நாகராஜன்! ** கே.சங்கர்!!
ஏ.பி.நாகராஜன் பேரைத் திருவிளையாடல் என்றும் சொல்லும்! அதே போல் கே.சங்கரின் பேரை தாய் மூகாம்பிகை என்றும் சொல்லும்!

சுப்ரபாதம் படத்தில், நம்பியார் பெருமாளின் மிகச் சிறந்த பக்தர்!
பக்தர் என்பதைக் காட்டிலும் அன்பர்! உயிர் நண்பர்! உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே என்று இருப்பவர்!
அவர் பெருமாளுக்குக் கோயில் ஒன்னு கட்ட நினைப்பாரு! அதுக்குப் பல முயற்சிகள் எடுப்பாரு! ஆனால் பல தடங்கல்கள் வரும், பொதுவிலும், சொந்த வாழ்விலும்!

கடந்தும், கிடந்தும், நடந்தும் அதை எல்லாம் நம்பியார் எப்படிச் சமாளிக்கிறார் என்பதைப் படத்தில் காட்டி இருப்பார்கள்! ஜிரா வந்து படத்தின் கதைச் சுருக்கத்தைச் சொல்லட்டும்!
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையமைக்க, கவியரசர் கண்ணதாசன் எழுதிய அருமையான பாடல்கள் இந்தப் படத்தில்!

* கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் - வாணி/யேசுதாஸ் - கண்ணன் பாட்டில் முன்பே வந்தது! இதோ!
* அடி ராதா! ஸ்ரீ கிருஷ்ணன் வந்தான் - வாணி
* உண்மை தெரிந்திருக்கும் ஒருவனய்யா - வாணி
* உன்னைத் நீ அறிவாய், உலகெங்கும் நான் அறிவேன் - TMS/சுசீலாம்மா
* வடதிசையில் சில வைகுந்தங்கள் - பாலமுரளி/வாணி
* திருக்கோவில் கட்ட எண்ணி - சீர்காழி/வாணி

சீர்காழி முருகன் பாட்டுக்குப் பிரபலம் என்றாலும், பெருமாள் மீதும் பல பாடல்கள் பாடி இருக்காரு! அவரும், வாணி ஜெயராமும் சேர்ந்து பாடி இருக்காங்க இந்தப் பாட்டை!
பாருங்க, கேளுங்க! (பாட்டு இணையத்தில் இல்லை! கேட்டுக் கொண்டே டைப்பினேன்! பிழை இருந்தால் சுட்டிக் காட்டவும்)


பாட்டில் சில திவ்யதேசங்கள் (108 திருப்பதிகள்) வரிசையா வருகின்றன! பாட்டை ஒழுங்காப் படிச்சிட்டு, எவை எவை என்று பின்னூட்டதில் சொல்லுணும் ஆமா!:-)

திருக்கோயில் கட்ட எண்ணி
பொறுப்போடு வந்த என்னை
வெறுப்போடு பார்த்தாயே பெருமாளே! - பலர்
சிரித்தாலும் விடமாட்டேன் திருமாலே!


காஞ்சி நகர் வரத ராஜா - உன் கருணை பெருமை என்ன லேசா?
வாஞ்சை யுடன் எனக்கு அருள - காஞ்சி வரதா, நீ விரைந்தோடி வருக!


திருப்பணி செய்வதற்கு உடந்தை - நீ திருக்கோயில் கொண்டிருக்கும் குடந்தை!
தினம்தோறும் சேவை செய்ய வரவா? - அந்த ஸ்ரீ வில்லி புத்தூரின் தலைவா!


பூலோக வைகுந்த வாசா, புகழ் ஓதும் ஸ்ரீ ரங்க நாதா
திருவரங்கத்து ரங்க நாதா, என் சேவைக்குத் துணைபுரிய வா,வா!


அனந்த பத்ம நாபா, ஆனந்த விஸ்வ ரூபா
திரு அனந்தை பத்ம நாபா, உனக்குச் சிங்காரக் கோயில் கட்ட வா,வா!

குருவாயூர் தன்னில் ஒரு குழந்தை, நடக்கக் கொஞ்சு தம்மா இரண்டு சலங்கை
வர வேண்டும் ஸ்ரீகிருஷ்ண பாலா, நிறைந்த வரத்தோடு ஆனந்த லாலா!


பழமை நிறைந்த திருப்பதியே, எங்கள் அழகர் மலைக் கருணை நிதியே!
சோளிங்கர் ஆள்கின்ற முகமே, பாவம் தொலைவதற்கு நீராடும் குளமே!

தொண்டு செய்யும் அடியார் தமக்கு உன் சோதனை போதுமடா!
சோதனை தீர்த்து உன் பாத மலர்களில் எங்களைச் சேர்த்திடடா!
கொண்டது கொள்கை என்றது ஈன்றவர் கூறுதல் கேளுமடா!
கோயில் திறந்திட வில்லை எனில் வைகுண்டத்தில் சேர்த்திடடா! வைகுண்டத்தில் சேர்த்திடடா! வைகுண்டத்தில் சேர்த்திடடா!


நரசிம்மா நரசிம்மா நரசிம்மா
வைகுந்தா வைகுந்தா வைகுந்தா
ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா


மைவண்ண மேனி கொண்ட ஸ்ரீ நாதா!
திருமகள் தன்னை மார்பில் வைத்த மலர் மார்பா!
மெய்க்கூந்தல் வேதவல்லி தலை மகனே (?) - கனல்
நிறைந்திருக்கும் அலமேலு வளர்ந்தவனே! (?)


எத்தனையோ உலகில் வடி வெடுத்தாய் - அன்று
எல்லா வடிவினிலும் பெண்ணெடுத்தாய்!
பித்துப் பிடித்து பெண்ணை அறியாயோ - இன்று
சித்தம் தெளிந்தது என்று அருள்வாயோ!

பாண்டுரங்கா பண்டரிநாதா பன்னக சயனா மணிவண்ணா!
பத்மாநாபனே வீரராகவா ஆதிகேசவா ஸ்ரீகிருஷ்ணா!
ரிஷிகேசா ஸ்ரீரங்கா திருமாலே நரசிம்மா!
ரிஷிகேசா ஸ்ரீரங்கா திருமாலே நரசிம்மா!

குரல்: சீர்காழி கோவிந்தராஜன், வாணி ஜெயராம்
வரி: கவியரசர் கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
படம்: சுப்ரபாதம்


பி.கு:
இந்தத் "திருக்கோயில் கட்ட எண்ணி" பாட்டைக் கேட்கும் போதெல்லாம் கொஞ்சம் உணர்ச்சி மயமாகி விடுவேன்! ஏன்னா, சிறு வயதில்,
எங்கள் வாழைப்பந்தல் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் (ஆனைக்கருளிய அழகப்பெருமாள் - கஜேந்திர வரதராஜப் பெருமாள்) சிதிலம் அடைந்து இருந்தது!
அப்போது அதை மீண்டும் ஒழுங்கு செய்து கட்டணும்னு, ஒரு சின்னப் பையன் மனசு ரொம்பவே துடிக்கும்! மனசுக்குள்ளேயே குடமுழுக்கு, அபிசேகம், உற்சவம்-ன்னு வேற நடத்திப் பாத்துக்குவான்! கனவு வேற!! :-)

சின்னப் பசங்கள கூட்டுச் சேத்துக்கிட்டு அவுங்களுக்குப் பாடம் நடத்துறது; குடுங்கடா குரு தட்சணை-ன்னு, அப்பால எல்லாரும் கோயில்-ல புல்லு புடுங்கறது, ஒடைஞ்ச வாகனத்தை அரக்கு வச்சிப் பீஸ் பீஸா ஒட்டுறது-ன்னு ஒரே கலாட்டா!

வீட்டுல வேற இவன் அட்டகாசம் தாங்க முடியலை! சும்மா சும்மாக் காசு கேட்டுக்கிட்டே இருப்பான்! அப்பல்லாம் வீட்டுல இம்புட்டு வசதி போதாது! அப்போ-ன்னு பார்த்துக் குடும்பமும் சென்னைக்குக் குடி பெயர்ந்தது!

பின்னாடி என்னென்னமோ எல்லாம் நடந்து, ஊர்ப் பெரியவங்க கொஞ்சம் கண்ணைத் தொறந்தாங்க! ஃபாதர் ரோசாரியோ கிருஷ்ணராஜ் அவர்கள் பரிந்துரையில், ஊர் மாதா கோயிலின் மரப்பலகை எல்லாம் நன்கொடையாக வந்து சேர, பெரிய திருமலை ஜீயர் விஷயம் தெரிஞ்சி வந்து உதவி செய்ய, கோயில் ஒரு வழியாச் சரியானது!

கோயிலில் கொசுத் தொல்லை ஜாஸ்தியா இருக்குன்னு, அர்ச்சனைத் தட்டில் டார்ட்டாய்ஸ் கொசுவத்தி வச்சிக் குடுத்து, அய்யிரு கிட்ட அடி வாங்குனது, அய்யமாரு வூட்டுப் பொண்ணுங்க எல்லாம் அவன் சப்போர்ட்டுக்கு வந்தது! இதெல்லாம் தனிக் கதை!
இப்ப நெனச்சாக் கூடச் சிரிப்பு சிரிப்பா வருது! :-)))

16 comments :

வல்லிசிம்ஹன் said...

ரவி, கோயில் கட்டிக் கும்பாபிஷேகமும் ஆச்சா.
பாட்டு கேட்டுட்டுத் திருப்பி வரேன்.

G.Ragavan said...

நான் கொடுத்த பாட்டை வலை ஏற்றியமைக்கு நன்றி பல திறு கண்ணபிறான் றவி சங்கற் அவர்களே

றவி, தாய் மூகாம்பிகைக்கு முன்பே வருவான் வடிவேலன் தான் பெயர் வாங்கி தந்தது.

G.Ragavan said...

// * கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் - வாணி/யேசுதாஸ் - கண்ணன் பாட்டில் முன்பே வந்தது! இதோ!
* அடி ராதா! ஸ்ரீ கிருஷ்ணன் வந்தான் - வாணி //

றவிசங்கற், படத்தில் அத்தனை பாடல்கலிலும், இந்த இரண்டு பாடல்கள் மிகவும் பிடிக்கும்.

திருக்கோயில் பாடலும் அருமையனதெ. ஒவ்வொரு ஊரகக் கூட்டிக் கொன்டு செல்வர்கள் பாட்டில்.

அதே போல வடதிசையில் பாட்டில்.. வடகத்திக் கோயில்கள் பலவற்றைக் காட்டுவார்கள்.

Raghav said...

ஆஹா ஆஹா ! என்ன சொல்லுறது !
தினமும் பெருமாள் பாடல்கள் கேட்டு வளர்ந்த என்னோட சின்ன வயசு ஞாபகம் வருது. இந்த மாதிரி
பாடல்கள், ஒரு 500வது எங்க வீட்டுல இருக்¢கும். இந்த பாட்டை கேக்கும் போது எனக்கு உடனே
ஞாபகத்தில் வரும் பாட்டு,

"கீதை சொன்ன கண்ணன் வண்ண தேரில் வருகிறான் !!
கேட்டவர்க்கு கேட்டபடி வாழ்வு தருகிறான்.. "

ரவி அண்ணா, நமக்குள்ள நிறைய ஒற்றுமை இருக்கே !!

1. என்னப்பன், என் வளர்ச்சிக்கு காரணன், என் ஊர் எமனேஸ்வரத்தில் ( பரமக்குடி அருகில்) அருள் பாலித்து கொண்டிருக்கும் " ஸ்ரீ பெருந்தேவி தாயார் ஸமேத ஸ்ரீவரதராஜப் பெருமாள்"

2. அவருக்கு அலங்காரம் பண்ணி பார்ப்பதென்றால் எனக்கு கொள்ளை விருப்பம். முன்பு முடியவில்லை, தற்பொழுது எனது அண்ணாவின் கைவண்ணத்தில், பெருமாள் கண்கொள்ளா அழகுடன் ஜொலிக்கிறார்.

Kavinaya said...

ஆஹா. என்ன அருமையான பாடல்! அதுவும் கடைசிப் பகுதிக்கு வந்ததும் உணர்ச்சிவசப்படும்படி ஆகிப் போச்சு! நன்றி ஜிறா, றவி!

சில வார்த்தைகள், எனக்குக் கேட்டபடி:

பலர் மிதித்தாலும் விடமாட்டேன்

நீ திருக்கோயில் கொண்டிருக்கும் குழந்தை!

ரங்க ஸ்ரீ வில்லி புத்தூரின் தலைவா!

பித்துப் பிடித்த பெண்ணை அறியாயோ

//அர்ச்சனைத் தட்டில் டார்ட்டாய்ஸ் கொசுவத்தி வச்சிக் குடுத்து, அய்யிரு கிட்ட அடி வாங்குனது, அய்யமாரு வூட்டுப் பொண்ணுங்க எல்லாம் அவன் சப்போர்ட்டுக்கு வந்தது! இதெல்லாம் தனிக் கதை!//

இந்தத் தனிக்கதையை கூடிய சீக்கிரம் எதிர்பார்க்கலாமா, கண்ணா? :)

Raghav said...

1. காஞ்சி - அத்திகிரி வரதராஜர்
2. கும்பகோணம்
3. ஸ்ரீவில்லிபுத்தூர்
4. ஸ்ரீரங்கம்
5. திருவனந்தபுரம்
6. மதுரை அழகர் கோவில்
7. சோழிங்கர்
குருவாயூர் ஸ்தலம் பாடலில் இடம் பெற்றுள்ள அபிமான ஸ்தலம், 108 திருப்பதிகளுள் ஒன்று அல்ல.

சரியா அண்ணா ?

Raghav said...

ஆஹா ஸ்ரீவைகுண்டம் மறந்துட்டேனே !!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
ரவி, கோயில் கட்டிக் கும்பாபிஷேகமும் ஆச்சா.
பாட்டு கேட்டுட்டுத் திருப்பி வரேன்//

ஆச்சு வல்லியம்மா!
கோயில் பெருசு! விழா எல்லாம் சிறுசு தான்! (என்னைப் போலவே):-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நான் கொடுத்த பாட்டை வலை ஏற்றியமைக்கு நன்றி பல திறு கண்ணபிறான் றவி சங்கற் அவர்களே//

அடுத்த தபா வரிகளும் சேர்த்துக் கொடுங்க றாகவா! :-)

//றவி, தாய் மூகாம்பிகைக்கு முன்பே வருவான் வடிவேலன் தான் பெயர் வாங்கி தந்தது//

ஆமாங்க ஜிறா!
ஆனா பலருக்கும் ஜனனி ஜனனி தான் அதிகம் தெரியும்!
வருவான் வடிவேலன் "அவருக்கு" மட்டுமே அதிகம் தெரியும்:-)

APN கூட கந்தன் கருணை எடுத்தாரு!
ஆனா திருவிளையாடல் தானே அதிகம் பிரபலம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//படத்தில் அத்தனை பாடல்கலிலும், இந்த இரண்டு பாடல்கள் மிகவும் பிடிக்கும்//

கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் தான் ஜிறா!
ற-கரம்-ன்னு கண்ணனை நினைச்சிச் சொன்னீங்க! பலிச்சிடிச்சிப் பாத்தீங்களா? :-)

//திருக்கோயில் பாடலும் அருமையனதெ. ஒவ்வொரு ஊரகக் கூட்டிக் கொன்டு செல்வர்கள் பாட்டில்//

yessu! வீடியோவில் தெரிகிறதே!

//அதே போல வடதிசையில் பாட்டில்.. வடகத்திக் கோயில்கள் பலவற்றைக் காட்டுவார்கள்//

பண்டரிபுரம் காட்டுவாங்க! ரொம்ப நல்லா இருக்கும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghavan said... //

சதம் அடிக்கும் வேளையில் கண்ணன் பாட்டில் புத்தம் புதிதாக வந்துதித்த நண்பர் ராகவனை அனைவர் சார்பிலும் வரவேற்கிறேன்!

ராகவனே வருக!
ராகங்கள் பல தருக!


//இந்த மாதிரி
பாடல்கள், ஒரு 500வது எங்க வீட்டுல இருக்¢கும்//

சூப்பரு! இனி கண்ணன் பாட்டு அமுத சுரபி தான்!

//"கீதை சொன்ன கண்ணன் வண்ண தேரில் வருகிறான் !!
கேட்டவர்க்கு கேட்டபடி வாழ்வு தருகிறான்.. "//

இந்தச் சீர்காழி பாட்டை மடல்காரன் பாலு அண்ணா இங்கு முன்பே இட்டுள்ளார்!
http://kannansongs.blogspot.com/2007/09/66.html

//ரவி அண்ணா, நமக்குள்ள நிறைய ஒற்றுமை இருக்கே !!//

ரவிக்கும் ராகவன் என்கிற பெயருக்கும் எப்பமே ஒற்றுமை தான்! :-))

//எமனேஸ்வரத்தில் ( பரமக்குடி அருகில்) அருள் பாலித்து கொண்டிருக்கும் " ஸ்ரீ பெருந்தேவி தாயார் ஸமேத ஸ்ரீவரதராஜப் பெருமாள்"//

அருமை! வரதனைப் பற்றி எழுதுங்க!

//எனது அண்ணாவின் கைவண்ணத்தில், பெருமாள் கண்கொள்ளா அழகுடன் ஜொலிக்கிறார்//

அன்பும் அலங்காரமும் ஒன்று சேரும் மோகனன், மன வாகனன் அல்லவா அவன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கவிநயா said...
அதுவும் கடைசிப் பகுதிக்கு வந்ததும் உணர்ச்சிவசப்படும்படி ஆகிப் போச்சு! நன்றி ஜிறா, றவி!//

ஜிறா
கவி அக்காவை ஏன் உணர்ச்சி வசப்பட வைக்கறீங்க? :-)

//பலர் மிதித்தாலும் விடமாட்டேன்
நீ திருக்கோயில் கொண்டிருக்கும் குழந்தை!
ரங்க ஸ்ரீ வில்லி புத்தூரின் தலைவா!
பித்துப் பிடித்த பெண்ணை அறியாயோ//

இன்னொரு முறை கேட்கிறேன்-க்கா! கேட்டுட்டு மாத்திடறேன்!

//இந்தத் தனிக்கதையை கூடிய சீக்கிரம் எதிர்பார்க்கலாமா, கண்ணா? :)//

:-)))
அதான் சுருக்கமாச் சொல்லிட்டேனேக்கா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குருவாயூர் ஸ்தலம் பாடலில் இடம் பெற்றுள்ள அபிமான ஸ்தலம், 108 திருப்பதிகளுள் ஒன்று அல்ல.
சரியா அண்ணா ?//

சரியே ராகவா! :-)

மற்ற திவ்ய தேசமெல்லாம் சரியே!
சிலவற்றில் ஊர் பெயரைச் சொல்லாமல் அங்குள்ள இறைவனின் பெயரைச் சொல்கிறார்கள்! அப்படிப் பார்த்தால்...

வேதவல்லி=திருவல்லிக்கேணி
அலர்மேல் மங்கை=திருமலை திருப்பதி
வீரராவன்=திருவள்ளூர்
ஆதிகேசவன்=திருவட்டாறு & அஷ்டபுஜம், காஞ்சி

அபிமானத் தலம்:
ரிஷிகேசன்=ரிஷிகேசம்

Raghav said...

ஆஹா! இதுல இவ்வளவு கோவில்கள் இருக்கா !!

வரம் தரும் ராஜன் வரதராஜன் பற்றி சீக்கிரமே சொல்றேன் ...

என்னோட "Name mate" ஜி.ரா அவர்களுக்கு நன்றி...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஜிரா சொன்ன எழுத்துப் பிழையும் சொற் சுவையும் கலந்த பாணத்தை, அவர் மீதே திருப்பி விட்டுப், பதிலுக்கு விளையாடியது வெறும் விளையாட்டே!

ஆனால் இதனால் எழுத்துப் பிழைகள் மலியும் என்று என் உயிர் நண்பர் உளமாரக் கருதியதால், அடியேன் இங்கு மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்!

இதனால் பலரும் தொடர்ந்து விளையாடிய கும்மிக்கும் அடியேனே பொறுப்பேற்றுக் கொண்டு, எதையும் விளக்க முற்படாது, நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருகிறேன்!

ஹரி ஓம் நமோ நாராயணாய நமஹ!

குமரன் (Kumaran) said...

//என் உயிர் நண்பர்//

நாங்கள் எல்லாம் தனிமடலில் சொன்னதை இங்கே வெளிப்படையாக ஒத்துக் கொண்டதற்கு நன்றி இரவிசங்கர். ஸ்ரீதர் கேட்ட மூன்றாவது கேள்விக்கும் இது தானே பதில். :-)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP