Monday, December 24, 2007

என்னை விட்டுப் போன கண்ணன் வரக் காணேனே!


பொழுது மிகவாச்சுதே சகியே என்னை விட்டுப்
போன கண்ணன் வரக் காணேனே (பொழுது)

குழலோசை கேட்டு கூடிடும் மங்கையர்
விழியால் வலை வீசி அழைத்துச் சென்றனரோ (பொழுது)

புழுவென நான் இங்கு புலம்பித் துடிக்கையிலே
பூவையருடன் அங்கு பேசிச் சிரிக்கப் போமோ?
பைங்கிளி உனைக்கணம் பிரியேன் என்ற
பேசும் மறந்தானோ பேதையைத் துறந்தானோ? (பொழுது)



இயற்றியவர்: அம்புஜம் கிருஷ்ணா
இராகம்: ரேவதி
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ

7 comments :

jeevagv said...

What a gem of a composition from Smt.Amubjam krishna in raagam Revati!

There is another one that this song reminds me - "mananilai aRiyEnadi managavar mAyavan..."

குமரன் (Kumaran) said...

பாடலை எழுதியது திருமதி. அம்புஜம் கிருஷ்ணா என்பதையும் பாடலில் இராகம் ரேவதி என்பதையும் சொன்னதற்கு நன்றி ஜீவா. இடுகையிலும் அதனைச் சொல்லியிருக்கிறேன் இப்போது.

இந்தப் பாடலைக் கேட்டவுடன் பாரதியார் எழுதியிருப்பாரோ என்று பாரதியார் கவிதைகளில் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. இப்போது தானே தெரிகிறது அதனை எழுதியவர் யார் என்று. நீங்கள் சொன்னது போல் அருமையான பாடல் தான் இது.

நீங்கள் சொன்ன இன்னொரு பாடலையும் தேடிப் பார்க்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நல்ல பாடல் குமரன்!
அம்புஜம் கிருஷ்ணா பல அருமையான தமிழ்ப் பாடல்களைச் செய்துள்ளார். பாபநாசம் சிவனாருக்குப் பின் தமிழிசைச் சேவையில் இவர் பங்கு மகத்தானது!

//புழுவென நான் இங்கு புலம்பித் துடிக்கையிலே
பூவையருடன் அங்கு பேசிச் சிரிக்கப் போமோ?//

கதறி மனம் உருகி நான் அழைக்கையில்
இதர மாதருடன் நீ களிக்கவோ - இது தகுமோ, இது முறையோ, இது தர்மம் தானோ...
அலை பாயுதே வரிகள் நினைவுக்கு வருகின்றன! :-)

ரசிகன் said...

//நேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே!//

என்னங்க இப்படி சொல்லிப்புட்டிங்க..
நல்ல பாட்டை கேட்டுப்புட்டு பின்னூட்டம் எழுத நேரமில்லேன்னாக்கா..

அருமையா இருக்குங்க.. (அட எனக்கு கூட கர்நாடக சங்கீதம் கேக்கற அளவு பொறுமை வளர்ந்திடுச்சே.. ஒருவேளை நல்ல தமிழ் பாட்டாய் இருந்ததால இருக்குமோ?..)

குமரன் (Kumaran) said...

ஆமாம் இரவிசங்கர். நானும் திருமதி. அம்புஜம் கிருஷ்ணா அவர்களின் பல தமிழ் இசைப்பாடல்களை விரும்பிக் கேட்டிருக்கிறேன். நீங்கள் சொன்னது போல் பாபனாசம் சிவனைப் போல் இவரும் நிறைய தமிழ் இசைப்பாடல்களை எழுதியிருக்கிறார். நம் வலைப்பதிவர் யாரோ ஒருவருக்கு நெருங்கிய சொந்தம் என்று கூட படித்ததாக நினைவு. யார் என்று தான் சரியாக நினைவில்லை. வல்லியம்மாவா?

புழுவென...சிரிக்கப் போமோ கேட்கும் போது எனக்கும் கதறி...தருமம் தானோ வரிகள் தான் நினைவிற்கு வந்தன. அதே போல் 'பைங்கிளி உனைக்கணம் பிரியேன் என்ற பேச்சும் மறந்தானோ பேதையைத் துறந்தானோ' என்னும் போது பாரதியாரின் கண்ணன் பாட்டுகளில் பல நினைவிற்கு வந்தன.

குமரன் (Kumaran) said...

நன்றி ரசிகரே. நல்லா இரசிச்சிருக்கீங்கன்னு தெரியுது. இந்தக் கண்ணன் பாட்டு பதிவிலயும் முருகனருள் பதிவிலயும் நிறைய தமிழ்ப்பாடல்கள் கருநாடக இசையில் இருக்குதுங்க. கேட்டுப் பாருங்க. உங்களுக்குக் கருநாடக இசை பிடிச்சிரும். :-)

Dr M.D.Jayabalan said...

என்னைப் பலசமயம் கலங்கவைத்த ராகம் ரேவதி.பாம்பே ஜெயஸ்ரீ யின் மாதவ நீபா பாடலையும் கேட்டு ரசிக்கவும். எம்.எஸ் பாடிய போ,சம்போ பாடலும் (நித்யஸ்ரீ )அதே ராகம். என் சிறுகதை "ரேவதி" யை ப்ரதிலிபி.காம் இல் படிக்கவும்.pratilipi.com

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP