Sunday, December 30, 2007

79. சிநேகிதியே(லேடீஸ் ஒன்லி): ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ?

ஹீரோவே இல்லாம ஒரு படம் தமிழ் சினிமாவில் வந்திருக்கா?
ஹீரோயின் இல்லாமத் தான் படம் வரக் கூடாது!
ஹீரோ இருந்தா என்ன, இல்லாட்டி என்ன-ன்னு யாருப்பா அங்கன சவுண்ட் வுடறது? :-)
எதுவா இருந்தாலும் நம்ம கானா பிரபா அண்ணாச்சி கிட்ட போயி கேளுங்க! ஏன்னா அவரு தான் இந்த லேடீஸ் ஒன்லி பாட்டைப் போடணும் ரொம்ப அக்கறை எடுத்துக்கிட்டாரு! :-)

Y2K போது, நம்ம சோதிகா அக்கா நடிச்சி ஒரு படம் வந்திச்சி!
சிநேகிதியே-ன்னு படம் பேரு!
அவங்க கூட இஷிதா, ஷப்ரானி முகர்ஜி, தபு-ன்னு ஒரே பொண்ணுங்க கூட்டம் தான் படம் ஃபுல்லா!
இயக்குனர்: பிரியதர்ஷன் (அதாங்க காலாபாணி, கோபுர வாசலிலே எல்லாம் பண்ணாரே! அவரே தான்! மலையாள எழுத்தாளர்-இயக்குனர்)

படத்துல சோதிகா அக்கா, அவிங்க சிநேகிதி ஷப்ரானியைக் காப்பாத்த ஒரு கப்சா விடுவாங்க! ஒரு லண்டன் பையன் ஷப்ரானியைக் காதலிக்கிறதா. ஆனா அது நெசமாலுமே நெசம் ஆகிடும்! வலைக்குள் சிக்கிய இதயம் கணக்கா, ஒரு பையன் மாட்டிக்குவான்!

ஓட்டலுக்கு பொண்ணு பாக்க வந்த பையன் கொலை செய்யப்படுவான்!
பழி நம்ம சோதிகா மேல! தபு, ACP போலீஸ் ட்ரெஸ்ஸூல வந்து விஜாரணையெல்லாம் தூள் கெளப்புவாங்க!
பொண்ணுங்க எஸ்கேப்புக்கு ஓட, போலீஸ் துரத்த, கடைசீல பாத்தாக்கா...ACP தபு தான் கொலைகாரக் கட்டழகி! :-)

இது இந்தில வேறு, Friendshipன்னு டப் பண்ணி வந்துச்சு!
ஆனா ரெண்டுத்தலேயும் பெருசா ஓடினா மாதிரி தெரியலை! ஹீரோ, பஞ்ச டயலாக் எல்லாம் இல்லாம, வெறும் நாயகிகளை மட்டுமே வெச்சு ஓட்ட முடியுமா-ன்னு கேக்குறீங்களா? அது என்னமோ சரி தான்!:-)
படத்துலயும் ஏகப்பட்ட ஓட்டைகள்! பிரியதர்ஷன் படமா இது என்று கேட்கும்படி ஆனது!

ஆனா சும்மா ஜாலி டைம்-பாசுக்கு ஓக்கே தான்!
அதெல்லாம் கிடக்கட்டும்...இப்போ எதுக்கு கண்ணன் பாட்டுல சோதிகாவுக்கு இம்புட்டு பில்டப்பு-ன்னு தானே பாக்கறீங்க? வெயிட்டீஸ்!



படத்துல ஒரு சூப்பர் கண்ணன்-ராதை பாட்டு! என்னமா ஒரு பீட்டு!
ஒரு பஞ்சாபி பாங்க்ரா போல் துவங்கும்!
ஆனா நம்ம மரபிசை போலத் தான் பாடல் வரிகள் ஒலிக்கும்! Song to Dance என்பார்களே! அதான் இது!
சும்மா, அத்தனை இசைக்கருவியும் இந்தப் பாட்டுல கொட்டி இருக்காங்க!
புல்லாங்குழல், ட்ரம்ஸ், தபேலா, Bansuri Flute, ஜலதரங்கம் இன்னும் என்னென்னமோ...தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா!

ஒரு Opera இசை மாதிரி, நடுவுல ஒரு பிட்டு வந்து வந்து போகும்!
Bass Guitar, Violin, Piano, Long Flute, Xylophone...ன்னு மேற்கத்தி வாத்தியங்களும் பிச்சி உதறும்! நீங்களே கேளுங்க! உங்களுக்கு மிகவும் பிடித்துப் போகும்!

நேயர் விருப்பம்: கானா பிரபா அண்ணாச்சி, முனைவர் நா.கண்ணன் ஐயா



பாடலை இங்கே கேட்கவும்! இல்லையென்றால் கீழே தரவிறக்கம் செய்தும் கொள்ளலாம்!

Tamilmp3world.Com ...

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ?
கண் ரெண்டும் தந்தியடிக்க, கண்ணா வா கண்டுபிடிக்க!
கண் ரெண்டும் தந்தியடிக்க, கண்ணா வா கண்டுபிடிக்க!


கொள்ளை நிலவடிக்கும் - வெள்ளை ராத்திரியில் - கோதை ராதை நடந்தாள்
மூங்கில் காட்டிலொரு - கானம் கசிந்தவுடன் - மூச்சு வாங்கி உறைந்தாள்
பாடல் வந்தவழி - ஆடை பறந்ததையும் - பாவை மறந்து தொலைத்தாள்
நெஞ்சை மூடிக்கொள்ள - ஆடை தேவையென்று - நிலவின் ஒளியை எடுத்தாள்.


நெஞ்சின் ஓசை ஒடுங்கி விட்டாள், நிழலைக் கண்டு நடுங்கி விட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள், தன்னைத் தொலைத்து மயங்கி விட்டாள்
தான் இருக்கின்ற இடத்தினில், நிழலையும் தொடவில்லை - எங்கே? எங்கே?? சொல்! சொல்!!
கண் ரெண்டும் தந்தியடிக்க, கண்ணா வா கண்டுபிடிக்க
கண் ரெண்டும் தந்தியடிக்க, கண்ணா வா கண்டுபிடிக்க
(ராதை மனதில் ராதை மனதில்)


கண்ணன் ஊதும் குழல் - காற்றில் தூண்டி விட்டுக் - காந்தம் போல இழுக்கும்
மங்கை வந்தவுடன் - மறைந்து கொள்ளுவது - மாயக் கண்ணன் வழக்கம்
காடு இருண்டு விட - கண்கள் சிவந்து விட - காதல் ராதை அலைந்தாள்
அவனைத் தேடி அவள் - தன்னைத் தொலைத்துவிட்டு - ஆசை நோயில் விழுந்தாள்

உதடு துடிக்கும் பேச்சு இல்லை, உயிரும் இருக்கும் மூச்சு இல்லை
வந்த பாதை நினைவு இல்லை, போகும் பாதை புரியவில்லை
உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால், பேதை ராதை ஜீவன் கொள்வாள் - கண்ணா எங்கே? வா வா!
கண்ணீரில் உயிர் துடிக்க, கண்ணா வா உயிர் கொடுக்க!
கண்ணீரில் உயிர் துடிக்க, கண்ணா வா உயிர் கொடுக்க!

(ராதை மனதில் ராதை மனதில்)


கன்னம் தீண்டியதும் - கண்ணன் என்று அந்தக் - கன்னி கண்ணை விழித்தாள்
கன்னம் தீண்டியதும் - கண்ணன் இல்லை வெறும் - காற்று என்று திகைத்தாள்
கண்கள் மூடிக் கொண்டு - கண்ணன் பேரைச் சொல்லிக் - கைகள் நீட்டி அழைத்தாள்
காட்டில் தொலைத்துவிட்ட - கண்ணின் நீர்த்துளியை - எங்கு கண்டு பிடிப்பாள்?


விழியின் சிறகை வாங்கிக் கொண்டு, கிழக்கை நோக்கிச் சிறகடித்தாள்
குயிலின் குரலை வாங்கிக் கொண்டு, கூவிக் கூவி அவள் அழைத்தாள்
அவள் குறை உயிர் கரையும் முன், உடல் மண்ணில் சரியும் முன், கண்ணா கண்ணா நீ வா!
கண்ணீரில் உயிர் துடிக்க, கண்ணா வா உயிர் கொடுக்க!


(பாடலின் இறுதியில் Opera போல் இசையைத் தவறாது கேளுங்க! நம்ம வித்யாசாகரா இப்படி? கலக்கீட்டீங்க வித்யா!)

குரல்: சித்ரா, சங்கீதா சஜீத், சுஜாதா
இசை: வித்யாசாகர்
வரிகள்: வைரமுத்து
படம்: சிநேகிதியே

நண்பர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Wish you a very Happy New Year, 2008!
புது மணத் தம்பதிகளுக்கு கண்ணன்-ராதை சார்பாக, Happy Thala New Year :-)

16 comments :

கானா பிரபா said...

ஆஹாஹா பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு

பாட்ட சொன்னேன் ;-)

ஆங்கிலப் புதுவருட வாழ்த்துக்கள் கண்ண பிரானே

கோவி.கண்ணன் said...

கண்ணன் பாட்டு பதிவர்கள் அனைவருக்கும், ரவி மற்றும் குமரன்,

புத்தாண்டு வாழ்த்துக்கள் !

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கா.பி. அண்ணாச்சி!
ஒங்க பாட்டைப் போட்டாச்சி!!

பேஷ் பேஷா!
பின்னூட்டம் போடும் போது நரசுஸ் காபி குடிச்சீயளா? :-)
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பிரபா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
கண்ணன் பாட்டு பதிவர்கள் அனைவருக்கும், ரவி மற்றும் குமரன்,
புத்தாண்டு வாழ்த்துக்கள் !//

கோவி அண்ணா
உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் நண்பர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

கேஆரெஸ்-பதிவில் இருக்கும் படங்களை எங்கெ பிடிச்சீங்க...
கொள்ளை அழகு!!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அறிவன் /#11802717200764379909/ said...
கேஆரெஸ்-பதிவில் இருக்கும் படங்களை எங்கெ பிடிச்சீங்க...
கொள்ளை அழகு!!!//

சோதிகா படத்தைக் கேக்கறீங்களா
இல்லை
ராதை படத்தைக் கேக்கறீங்களா அறிவன்? :-)))

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

கேஆரெஸ்,
நான் சொன்னது 'படங்கள்'...
'படம்' அல்ல...
சந்துல சிந்து பாட்றீங்களே அப்பு.......

ஷைலஜா said...

கன்னம் தீண்டியதும் - கண்ணன் என்று அந்தக் - கன்னி கண்ணை விழித்தாள்
கன்னம் தீண்டியதும் - கண்ணன் இல்லை வெறும் - காற்று என்று திகைத்தாள்
கண்கள் மூடிக் கொண்டு - கண்ணன் பேரைச் சொல்லிக் - கைகள் நீட்டி அழைத்தாள்
காட்டில் தொலைத்துவிட்ட - கண்ணின் நீர்த்துளியை - எங்கு கண்டு பிடிப்பாள்?//

'க'கர வரிசைலயே முழு பாரா பாருங்க!அமர்க்களமான வரிகள் ரவி. ரொம்பநாளாவே இந்தப்பாட்டு எங்க இன்னும் இங்க வரலயேன்னு நினச்சேன்..இப்போ வழக்கமான உங்க கலக்கல் முன்னுரையோட வந்தாச்சு...!! கேட்டு ரசிச்சேன்.
ஷைலஜா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அறிவன் /#11802717200764379909/ said...
கேஆரெஸ்,
நான் சொன்னது 'படங்கள்'...
'படம்' அல்ல...
சந்துல சிந்து பாட்றீங்களே அப்பு.......//

ஹிஹி...சும்மானா!

ராதையின் படங்கள் krishna.com, radharani.com - இவற்றில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டவை!

பல கண்ணன் பாட்டுப் பதிவுகளில் pic courtesy போட்டிருக்கேன்!
பேசாம நிரந்தரச் சுட்டி அடைப்பலகையில் (template)இல் கொடுத்துறலாமா-ன்னு பாக்குறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷைலஜா said...
கன்னம் தீண்டியதும் - கண்ணன் என்று அந்தக் - கன்னி கண்ணை விழித்தாள்

'க'கர வரிசைலயே முழு பாரா பாருங்க!அமர்க்களமான வரிகள் ரவி//

அட ஆமாம்! நான் நோட் பண்ணவே இல்லை! ஜோதிகா-வை நோட் பண்ணிக்கிட்டு இருந்தேனா! மிஸ் பண்ணிட்டேன் போல! :-)

//ரொம்பநாளாவே இந்தப்பாட்டு எங்க இன்னும் இங்க வரலயேன்னு நினச்சேன்..//

புத்தாண்டு ஸ்பெசல் நீங்க தானே ஷைல்ஸ்! ரெடி ஃபார் கண்ணன் பாட்டு ஃப்ரம் திருவரங்கப்ரியா! :-)

cheena (சீனா) said...

நல்ல தொரு பாடல் = மனதை மயக்குகிறது. அருமையான பாடல். அதை விளக்க வழக்கம் போல் ஜோஜொள்ளு. ம்ம்ம்ம் - இருக்கட்டும்.

மலைநாடான் said...

//அதை விளக்க வழக்கம் போல் ஜோஜொள்ளு//

நெசமாலுமே..அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//cheena (சீனா) said...
அருமையான பாடல். அதை விளக்க வழக்கம் போல் ஜோஜொள்ளு. ம்ம்ம்ம் - இருக்கட்டும்.//

ஹிஹி...
ஜோஜொள்ளா?

"ஜோஜொள்" என்ற இலக்கணத்தில் புதிய ஒரு சொல்லைக் கண்டுபிடித்துக் கொடுத்த சீனா சாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! :-)

சரி அது என்னங்க, "வழக்கம் போல"? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மலைநாடான் said...
//அதை விளக்க வழக்கம் போல் ஜோஜொள்ளு//
நெசமாலுமே..

போச்சு! நீங்களும் சீனா சார் கூடச் சேந்துக்கிட்டீங்களா மலைநாடான் ஐயா?

தங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Dr.N.Kannan said...

அப்பாடா! இப்போதைக்கு அப்போதே சொல்லி வைத்தல் என்பது இதுதான். பாட்டும் சரி, படத்தின் கோரியோகிராஃபியும் சரி, அதி உந்நதம்! வாழ்க.

Stevezkcc said...

கண்ணன் பாட்டு பதிவர்கள் அனைவருக்கும், ரவி மற்றும் குமரன், புத்தாண்டு வாழ்த்துக்கள் !

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP