Thursday, December 20, 2007

72. இது கண்ணன் குத்துப் பாட்டா? - கிருஷ்ணா முகுந்தா முராரே!

சென்ற ஆண்டு மார்கழி மாதம், கண்ணன் பாட்டு வலைப்பூவில், தினம் ஒரு கண்ணன் பாட்டாய் போட்டு, பாவம் தமிழ்மணத்தைக் கலங்கடித்துக் கொண்டு இருந்தோம்! :-)
இதைப் பார்த்து விட்டு, சக பதிவர்கள் மற்றும் பெனாத்தலார் எல்லாம், "வா முனிம்மா வா" எல்லாம் நேயர் விருப்பமாய் போட மாட்டீங்களா-ன்னு கலாய்ச்சிக்கிட்டு இருந்தாங்க முருகபிரான் ராம் சங்கர் (MRS) என்கிற ஒரு பதிவரை! :-)

சரி, இந்த வருஷம், அதே கொலை வெறியோட எறங்கலாமா-ன்னு ஒரு எண்ணம்!
தலைவர் குமரன், தளபதி ஜிரா எல்லாரும் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்!!

சிங்கம் சிங்களா இல்ல, மேரீட் ஆகவும் வரும்-னு வந்த வெட்டிப்பயலாரைப் பாட்டு போடச் சொல்லலாம். ஆனா அவுரு தில்லாலங்கடி தாங்கு, கண்ணா திருப்பிப் போட்டு வாங்கு-ன்னு பாட்டைப் போடுவாரு!
அந்தப் பாட்டுக்கு நான், நரிமேல்குழகர் உரையை வாங்கிப் படிச்சாலும், என் போன்ற ஞான சூன்யங்களுக்கு ஒன்னும் புரியாது! சரி அவரையும் இஸ்துக்கலாம்! :-)

கண்ணன் பாட்டில் உள்ள அன்பர்கள் ஷைலஜா, டிடி அக்கா, திராச, மலைநாடான் ஐயா, மடல்காரன்-ன்னு எல்லோரும் ஒரு ரவுண்டு கட்டி வாசிக்கத் தொடங்கியாச்சுன்னா, பிச்சிக்கிட்டு போயிடாதா!
சரி, தினம் ஒன்னா இல்லீன்னாக் கூட, அடிக்கடி வந்து மார்கழி பூச்சாண்டி காட்டி பயமுறுத்தலாம்! என்ன சொல்றீங்க மக்களே?
அக்கவுண்ட்டை இதோ நானே ஓபன் பண்ணறேன்! ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே!!
நம்ம டீச்சருக்குப் புடிச்ச பாட்டாம்-ல?



பாடலை இங்கு கேட்கவும்!
இதையே கொஞ்சம் மறுகலவை செய்து (Remix) பாடியிருக்காங்க! அதுவும் நல்லாத் தான் இருக்கு! இதோ..
KrishnaMukundaMura...


(பாடலின் ஓப்பனிங் ம்யூசிக்கைக் கட்டாயம் கேளுங்க - அருமையான புல்லாங்குழல்!)
கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
(கிருஷ்ணா முகுந்தா முராரே)

கருணா சாகர கமலா நாயக
கருணா சாகர கமலா நாயக
கனகாம்பர தாரி கோபாலா

(கிருஷ்ணா முகுந்தா முராரே)
(கருணைக் கடலே, கமலை மணாளா - பொன்னாடை சூடி, கோபாலா)

காளிய மர்த்தன கம்சனி தூஷண
காளிய மர்த்தன கம்சனி தூஷண
கமலாதள நயனா கோபாலா

(கிருஷ்ணா முகுந்தா முராரே)
(காளிங்க நடனா, கம்சனை வென்றாய் - தாமரைதளக் கண்ணா, கோபாலா)

குடில குண்டலம் குவலய தள நீலம்
மதுர முரளீர் அவ லோலம்
கோடி மதன லாவண்யம்
கோபி புண்யம் பஜாமி கோபாலம்

(வளைந்த காதணி, குவளையின் நீலம் - இனிய குழலின் மயக்கும் நாதம்
கோடி மன்மத அழகு மோகம் - கோபியர் வரமே, பஜனை செய்வோம் கோபாலம்)

கோபி ஜன மனமோகன வியாபக
கோபி ஜன மனமோகன வியாபக
கோபி ஜன மனமோகன வியாபக
குவலய தள நீலா கோபாலா...
குவலய தள நீலா கோபாலா...
குவலய தள நீலா கோபாலா...

(கிருஷ்ணா முகுந்தா முராரே)
(கோபியர் மனத்தை மோகித்து நிறைந்தாய் - கருங்
குவளை நீலக் கண்ணா - கோபாலா)

குரல்: எம்.கே.டி (தியாகராஜ பாகவதர்)
இசை: ஜி.ராமநாதன்
வரிகள்: பாபநாசம் சிவன்
படம்: ஹரிதாஸ் (1944) - 768 நாட்கள் ஓடியது.
ராகம்: நவ்ரோஜ்




பாட்டு-ல தமிழ்ச் சொற்கள் இல்லீன்னாக் கூட, இந்தப் பாடல் ஒரு பெரிய ஹிட் என்பதால் இங்கிட்டு கொடுத்தோம்! இதை எழுதிய பாபநாசம் சிவன் அவர்கள் தமிழ் மேதை; தமிழில் பல இசைப்பாடல்கள் செய்து கொடுத்து, தமிழ்த் தியாகராஜர் என்ற சிறப்பு பெற்ற தமிழ்க் கவி!
அவரு சினிமாவில் பாப்புலர் ட்யூனுக்கும் என்ன அருமையா பாடல் கொடுத்திருக்கார் பாருங்க! அதுவும் நவ்ரோஜ் ராகத்துல!

இதைக் குத்துப்பாட்டு-ன்னு எப்படி மாப்ள சொன்னே-ன்னு என் கிட்ட சண்டைக்கு வராதீங்க மக்கா!

இந்தப் பாட்டு வந்த காலத்தில், குத்துப்பாட்டுக்கு இலக்கணம் கூட இருந்திருக்காது! ஆனா குத்துக்கு உரிய அதே துள்ளல், ஸ்பீடு, ஆட்டம்-னு எல்லா இலக்கணமும் இந்தப் பாட்டுக்கும் இருக்கு! இதில் மயங்காத மனமும் உண்டோ?
Dandiya, Garba, கோலாட்டத்துக்கு மட்டும் இந்தப் பாட்டை வச்சாக்கா எப்படி இருக்கும்! ...ஆகா!

22 comments :

இலவசக்கொத்தனார் said...

//தாமரைதளக் கண்ணா//

இலை? பூ? மொட்டு? தெளிவாச் சொல்லுங்கப்பா....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
//தாமரைதளக் கண்ணா//
இலை? பூ? மொட்டு? தெளிவாச் சொல்லுங்கப்பா....//

தல
மொதல்ல இது குத்துப்பாட்டா-ன்னு நீங்க சொல்லுங்க! :-)
அப்பறம், நவ்ரோஜ் தான இது?

தள = petal, இதழ்.
அது பூவிதழாவும் இருக்கலாம், இலை இதழாகவும் இருக்கலாம்!
துளசி தளம் = துளசி இலை
கமல தளம் = தாமரை இதழ்

துளசி கோபால் said...

டீச்சருக்குக் கோபாலைப் பிடிக்காதா என்ன?

திட்டிக்கொட்ட ஒரு ஆள் வேணாமா? :-))))))

cheena (சீனா) said...

பெருமாளின் செல்லப்பிள்ளை - கேயாரெஸ் பத்தி டீச்சரின் கமெண்ட்

பதிவு நல்லா இருந்திச்சி - பாட்டும் கேட்டேன் - துவாதசி இன்னிக்கி - நன்றி - 1944ம் ஆண்டு - ம்ம்ம் -

cheena (சீனா) said...

டீச்சர் கோபாலேத் திட்டுவாரா என்ன

cheena (சீனா) said...

குத்துப் பாட்டு தான் - தாண்டியாவுக்கு வைக்கலாம்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//துளசி கோபால் said...
டீச்சருக்குக் கோபாலைப் பிடிக்காதா என்ன?//

அதானே! துளசி தள நீலா...கோபாலா...ன்னு மாத்திப் பாடிடலாம் டீச்சர்! :-)

//திட்டிக்கொட்ட ஒரு ஆள் வேணாமா? :-))))))//

ஆகா, இது வேறயா?
துளசி தள நீலா, பாவம் கோபாலா-ன்னு இன்னொரு வாட்டி மாத்திப் பாடிடலாம்! :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//cheena (சீனா) said...
பெருமாளின் செல்லப்பிள்ளை -//

ஆகா...அது டீச்சர் தான்! அவங்க தான் பெருமாளின் செல்லம்!
சீனா சார்...இப்படிப் பட்டத்தை அவிங்க கிட்ட இருந்து பறிக்கலாமா?
அப்பறம் என்னையும் திட்டித் தலையில கொட்டப் போறாங்க! :-)

//கேயாரெஸ் பத்தி டீச்சரின் கமெண்ட்
பதிவு நல்லா இருந்திச்சி - பாட்டும் கேட்டேன் - துவாதசி இன்னிக்கி - நன்றி - 1944ம் ஆண்டு - ம்ம்ம் -//

OMG! neenga eppo teacher style-kku maraneenga? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//cheena (சீனா) said...
குத்துப் பாட்டு தான் - தாண்டியாவுக்கு வைக்கலாம்
//

சூப்பர்! சீனா சாரே சொல்லிட்டாரு! இனி Dandiya தான்!

கானா பிரபா said...

நல்ல டான்டியா தான் ;-)

ராதை மனதில் ராதை மனதில் பாட்டு போட்டிருக்கீங்களா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கானா பிரபா said...
நல்ல டான்டியா தான் ;-)//

வாங்க அண்ணாச்சி வாங்க!
அப்படியே ஒரு குச்சி கொடுங்க! டாண்டியா ஆடிட்டு வந்துடறோம்! :-)

//ராதை மனதில் ராதை மனதில் பாட்டு போட்டிருக்கீங்களா//

ஆகா..ஆசைய கெளப்பறீங்களே கா.பி; இன்னும் போடலை! போட்டுறவமா?

கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுபுடிக்க...
ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ?

கானா பிரபா said...

podungka podunga ;-))

G.Ragavan said...

சூப்பர் பாட்டுங்க.

தியாகராஜ பாகவதர் பாடுறப்போ மெதந்துக்கிட்டே பாடுறாப்புல இருக்கும். அதுதான் அவரோட ஸ்பெஷாலிட்டி. மன்மதலீலையை வென்றார் உண்டோன்னு பாட்டு இருக்குல்ல...அதப் போடுறது.

குமரன் (Kumaran) said...

சிறுவயதில் மதுரை சிடி சினிமா (City Cinema) தியேட்டரில் இந்தப் படத்தைப் போடும் போதெல்லாம் பார்த்திருக்கிறேன். குறைந்தது மூன்று நான்கு தடவையாவது. இந்தப் பாடல் மட்டும் எப்போதும் மனத்தில் நின்றுவிடும். அருமையான பாடல். பல நாட்களில் எங்கள் வீட்டில் என் மக்களுக்கு தாலாட்டாகவும் ஆகியிருக்கிறது. :-)

குத்துப்பாட்டு என்று நினைத்துக் கேட்டால் அப்படியும் தோன்றுகிறது. மறுகலவை செய்திருப்பதைக் கேட்டால் கட்டாயம் இது குத்துப் பாட்டு தான். :-)

இராகவன். 'மன்மத லீலையை வென்றார் உண்டோ' பாட்டை எந்த பதிவில் போடுவது என்று சொல்லுங்கள்? மன்மத மன்மதன் என்று யாரை நீங்கள் நினைக்கிறீர்கள்? காமனார் தாதையையா? காமதகனம் செய்தவரின் திருக்கண்களில் பிறந்தவரையா? அதற்கேற்ப அந்தப் பதிவில் அந்தப் பாடலைப் போட்டுவிடுவார் இரவிசங்கர். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said...
சூப்பர் பாட்டுங்க.
தியாகராஜ பாகவதர் பாடுறப்போ மெதந்துக்கிட்டே பாடுறாப்புல இருக்கும்//

மெதந்துகிட்டே கேட்டீங்கன்னு சொல்லுங்க! :-)
ஆமாம் ஜிரா...பாடல் வரிகளின் முடிவில் ஒரு மாதிரி இழுத்துப் பாடுவார். அதனால் இருக்குமோ?

//மன்மதலீலையை வென்றார் உண்டோன்னு பாட்டு இருக்குல்ல...அதப் போடுறது//

கண்ணன் பாட்டிலா? சரி போட்டாப் போச்சுது! வெளக்கம் நீங்க வந்து கொடுத்துருங்க! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
குறைந்தது மூன்று நான்கு தடவையாவது//

வாவ்! பழைய படத்தைக் கூட மீள்பதிவு செய்வாங்களா மதுரை சிட்டி சினிமாவில்!
அப்படின்ன ஒரு நேயர் விருப்பமே கொடுத்துறாலாம் போல் இருக்கே!

//பல நாட்களில் எங்கள் வீட்டில் என் மக்களுக்கு தாலாட்டாகவும் ஆகியிருக்கிறது. :-)//

ஆமாம் குமரன்...நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் யோசிச்சிப் பாத்தா, மெல்ல tap பண்றா மாதிரித் தான் இருக்கு! தாலாட்டுக்கும் வொர்க் அவுட் ஆகும்!

//மறுகலவை செய்திருப்பதைக் கேட்டால் கட்டாயம் இது குத்துப் பாட்டு தான். :-)//

ஆமா...மறு கலவை குத்தே தான்! சந்தேகமே இல்லை!

//இராகவன். மன்மத மன்மதன் என்று யாரை நீங்கள் நினைக்கிறீர்கள்? காமனார் தாதையையா? காமதகனம் செய்தவரின் திருக்கண்களில் பிறந்தவரையா?//

நஒகே!
ஜிரா சொல்லுங்க!
Who is madhan's madhan? madha madhan? மத மதன்னு நிக்காம, மதமதன் யாருன்னு சீக்கிரம் சொல்லுங்க!

//அதற்கேற்ப அந்தப் பதிவில் அந்தப் பாடலைப் போட்டுவிடுவார் இரவிசங்கர். :-)//

ஆமா...
முருகனருள்
கண்ணன் பாட்டு
எதுக்கு அதிட்டம் இருக்குன்னு பார்ப்போம்! :-)

மடல்காரன்_MadalKaran said...

ஒரு கலக்கு கலக்கிட்டீங்க KRS.. மார்கழி மாசம் கண்ணன் மனம் மணக்கும் மாசம்.!

அன்புடன், கி.பாலு

ஷைலஜா said...

மார்கழிக்கு திருப்பாவை, கோலங்கள், வெண்பொங்கல் இத்துடன் ரவியின் கண்ணன்பாட்டும்! கலக்கல்ஸ்!
ஷைலஜா

மலைநாடான் said...

//ராதை மனதில் ராதை மனதில் பாட்டு போட்டிருக்கீங்களா//

//ஆகா..ஆசைய கெளப்பறீங்களே //

போட்டிடலாமா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மடல்காரன் said...
ஒரு கலக்கு கலக்கிட்டீங்க KRS.. மார்கழி மாசம் கண்ணன் மனம் மணக்கும் மாசம்.!//

வாங்க பாலு!
கலக்கப் போவது யாரு?
நீங்க தான்!:-)
எங்கே அடுத்த கண்ணன் பாட்டு?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷைலஜா said...
மார்கழிக்கு திருப்பாவை, கோலங்கள், வெண்பொங்கல் இத்துடன் ரவியின் கண்ணன் பாட்டும்! கலக்கல்ஸ்!//

ஷைலஜா
ரவியின் கண்ணன் பாட்டா? நம்ம கண்ணன் பாட்டுன்னு சொல்லுங்க!
கலக்கல்ஸ் துவங்கட்டும்! உங்க பாட்டும் போட்டு அசத்திறலாம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//
மலைநாடான் said...
//ராதை மனதில் ராதை மனதில் பாட்டு போட்டிருக்கீங்களா//
//ஆகா..ஆசைய கெளப்பறீங்களே //

போட்டிடலாமா?//

போட்டே ஆகணும்! :-)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP