Wednesday, October 03, 2007

ஆடுகின்றான் கண்ணன்.

இந்தப்பாடல் ஏற்கனவே எனது பதிவொன்றில் இடப்பட்டதுதான். இருந்தாலும், இது கண்ணன் பாட்டில் இருப்பதுவும் ஒரு அழகுதான் என்றெண்ணி, இங்கே பதிவு செய்கின்றேன்.

"ஆடுகின்றான் கண்ணன்" எனும் தொலைக்காட்சித் தொடரின், தலைப்புப் பாடலாக வரும் இப்பாடலைப் பாடியிருப்பவர் பின்னணிப்பாடகர், சிறிநிவாஸ். பாடலுக்கான இசை சத்யா. பாடலை யாத்தவர் யாரெனத் தெரியவில்லை.

பாடலில் வரும் இடையிசை மிக அற்புதமாகவிருக்கும். அதுபோலவே பாடலுக்கான காட்சிப்படுத்தலும் அழகாகவிருந்தது. சரணத்தின் முன்னதாக வரும் இடையிசையில் காணப்படும் கலவை நுணுக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும். ரசிப்பேன், நீங்களும் ரசிக்கலாம்.

6 comments :

குமரன் (Kumaran) said...

எந்த சூழலில் இந்தப் பாடல் அமைகிறது ஐயா? ரொம்ப ஆழ்ந்த பொருள் கொண்ட பாடலாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் கேட்டுப் புரிந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

வெகு அருமையான பாடல். ஆடிகிறான் கண்ணன் என்ற சீரியல் வந்தது என்று நினைக்கிறேன்.
அப்போது கூடக் கேட்டதில்லை.
இப்போது தனியாகப் பாடலைக் கேட்கக் கொடுத்ததற்கு மிக நன்றி மலைநாடன்.
இசை, குரல் ,பொருள் அத்தனையுமே மிக நன்றாக அமைந்திருக்கின்றன.

மலைநாடான் said...

குமரன்!

இது தொடரின் ஆரம்பப்பாடல். நான் தொடர் பார்த்ததில்லை. ஆனால் இப்பாடலை மட்டும் பதிவு செய்து வைத்திருக்கின்றேன். இதன் ஒளிப்பதிவும் இருக்கவேண்டும். தேடிப்பார்க்கின்றேன். பாடல் என் விருப்பத் தேர்வில் உள்ளதால் ஒலிவடிவம், கணனி, கார், என எல்லாவிடத்திலும் கிடக்கிறது.
நீங்கள் சொல்வது போல், ஆழ்ந்து அனுபவித்துக் கேட்கக் கூடிய பாடல்.
பகிர்வுக்கு நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மிகவும் அழகான டீவி சீரியல் பாடல் மலைநாடான் ஐயா!
ஆடுகிறான் கண்ணன் என்ற சீரியல் தான்!
வரிகள், இசை, வேகம், உணர்ச்சி என்று எல்லாவற்றிலும் அருமையான பாடல். இதைப் பாடிய ஸ்ரீநிவாஸ் தான் மின்சாரக் கனவிலும் ஊ ல லா...என்று ஹை வோல்டேஜில் பாடுபவர்.

பாட்டின் வரிகள் கிடைக்குமா?

மலைநாடான் said...

வல்லிம்மா!

சீரியல்கள் பலவற்றிலும் வரும் பாடல்களைத் தனித்துக்கேட்டால் அதியற்புதமாகவிருக்கும். இந்தப்பாடலும் அத்தகையதே.
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

Anonymous said...

Its a wonderful song which I used to hear whenever I am feeling down. The music makes my spirit levels up...The words...is extra ordinarily nice...

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP