Thursday, February 15, 2007

தீனன் எனைப் போல் வேறெவர் கண்டாய்?





ஸ்ரீநிவாச திருவேங்கடமுடையாய்!
ஜெய கோவிந்த முகுந்தா அனந்தா!
தீன சரண்யன் எனும் பெயர் கொண்டாய்!
தீனன் எனைப் போல் வேறெவர் கண்டாய்?
(ஸ்ரீநிவாச)



ஜகம் புகழும் ஏழுமலை மாயவனே!
திருமகள் அலர்மேல் மங்கை மணாளனே!
ஜகன்னாதா சங்க சக்ர தரனே!
திருவடிக்கு அபயம் அபயம் ஐயா!
(ஸ்ரீநிவாச)



இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இராகம்: ஹம்ஸானந்தி
தாளம்: ஆதி
பாடியவர்: எஸ்.பி.இராம்

பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்.

இந்தப் பாடலை எம்.எஸ். பாடித் தான் முதலில் கேட்டேன். அதைத் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை.

Saturday, February 10, 2007

சின்னக் கண்ணன் அழைக்கிறான்!

கண்கள் சொல்கின்ற கவிதை - இளம்வயதில் எத்தனை கோடி?
இசைஞானி, இசைஞானி என்று பெயர் வாங்குவதற்கு முன்னரே, தன் ஞானத்தை மிக அருமையாக வெளிப்படுத்திய பாடல் இது.
எளிமையான வரிகள் - ஆனால் இதைப் பாட அவர் அழைத்தது யாரை?
கனராகப் பாடகர் என்று அப்போது அறியப்பட்ட,
கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி அவர்களை.

கண்ணன்-ராதை காதலாக இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம்,
ஒரு மாஸ்டர் பீஸ் பாடலைக் கேட்கும் திருப்தி கிடைக்கும்.
இதை ஜானகியும் அதே படத்தில் பாடியிருப்பார்.
பாலமுரளி பாடிய வெகு சில திரைப்பாடல்களில் இது தலைசிறந்த ஒன்று!
(வேறு பாடல்கள் என்னென்ன என்று சொல்லுங்க பார்க்கலாம்?)

ராஜா, இந்தப் பாட்டில் வரும் வாத்திய இசைக்கு, ஐரோப்பிய Baraoque பாரம்பரியத்தைப் பயன்படுத்தியதாகச் சொல்லுவார்கள்;
ரீதிகெளளை ராகம் ஒரு பக்கம், Baraoque மறு பக்கம்! ஆனால் ஒன்றை ஒன்று விழுங்காது,
பாடல் வரிகளும் விழுங்காது வந்து விழும் இனிய இசை!
ராஜாவின் இசை ஆய்வு (experiment) அப்போதே தொடங்கி விட்டது!

எல்லாம் சரி; பாடல் எதோ? - இதோ!
மாயனின் லீலையில் மயங்குது உலகம்! நாமும் மயங்குவோம்!




Radha%20Krsna
கண்கள் சொல்கின்ற கவிதை - உன் புன்னகை சொல்லாத அதிசயமா?

எஸ்.ஜானகி பாடுவது
பாலமுரளி கிருஷ்ணா பாடுவது


இந்தப் பதிவிலேயே கேட்க play button-ஐச் சொடுக்கவும்!

சின்னக் கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்


கண்கள் சொல்கின்ற கவிதை
இளம்வயதில் எத்தனை கோடி
என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை
(சின்ன கண்ணன்)

நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இதுதானா கண்மணி ராதா?
உன் புன்னகை சொல்லாத அதிசயமா
அழகே இளமை ரதமே
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்
(சின்ன கண்ணன்)



படம்: கவிக்குயில்
இசை: இளையராஜா
குரல்: பாலமுரளி கிருஷ்ணா
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
ராகம்: ரீதி கெளளை

ஸ்ரீநிவாசன் என்ற அன்பர் முன்பு ஒரு பின்னூட்டத்தில் கேட்ட நேயர் விருப்பம்!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP