Tuesday, July 24, 2007

61. பிருந்தா வனமும் ந(நொ)ந்த குமாரனும் - மிஸ்ஸியம்மா!

ஃபிகருங்க அல்வா கொடுத்த பசங்களுக்கு, இதை அப்படியே உல்டா பண்ணிக் கல்லூரியில் பாடிக் காட்டுவாய்ங்க! -
பிருந்தா வனமும் நொந்த குமாரனும், யாவருக்கும் பொதுச் செல்வமன்றோஏனோ குமரா இத்தனை சோகம், யார் தான் காதலில் வழுக்கி விழாரோ? :-)
ஸ்லோ டூயட்! (Slow Duet)...

மிஸ்ஸியம்மா படத்தில் ஒரு அழகான கண்ணன் பாட்டு.
கேட்கும் போது அப்படியே ஏரியில் ஓர் ஓடம் அப்படியும் இப்படியும் அசைவதைப் போல இருக்கும்!
அதுவும் துவக்கத்தில் வாசிக்கும் ஒரு ஓப்பனிங் பீஸ்...அது என்ன வாத்தியம்-ங்க? இசை இன்பத்துக்காரங்க வந்து சொல்லுங்கப்பா!

அதுவும் AM ராஜா குரலில், சுசீலாம்மாவும் கூடப் பாடுகிறார்! பொதுவா AM ராஜா-ன்னா, கூட ஜிக்கி பாடறது தான் காம்பினேஷன். ஆனா இங்க சுசீலாம்மா குழந்தைக் குரலில் கொஞ்சும் குழைவுக்குச் சொல்லவும் வேண்டுமா?

ஜி-ன்னு ஒரு படம் வந்துச்சி. அஜீத்-த்ரிஷா. அதுல "சரளாக் கொண்டையில் சாமந்திப் பூ"-ன்னு ஒரு பாட்டு வரும் :-)
அப்படியே அட்டைக் காபி, இதே மெட்டில்! நீங்களே கேளுங்க!
வித்யாசாகரின் சினிமா-காரம்-காபி = CVR உங்க லிஸ்டுல சேத்துக்குங்க! :-)

ஒரிஜினல் பாட்டைக் கேட்க இங்கே சொடுக்கவும்!
ஜிரா இந்தப் பாட்டைக் கண்ணன் பாட்டில் ரொம்ம நாளா தேடினார்-ன்னு காத்து வாக்குல ஒரு சேதி வந்துச்சு! :-)
ஜெமினி-சாவித்ரியை மறந்துட்டு
கண்ணன்-ராதை ஸ்லோ டூயட் ஆடறதா கற்பனை செஞ்சிக்கோங்கப்பா! :-)


பிருந்தா வனமும் நந்த குமாரனும்
யாவருக்கும் பொதுச் செல்வ மன்றோ
ஏனோ ராதா இந்தப் பொறாமை
யார்தான் அழகால் மயங்கா தவரோ
(பிருந்தா வனமும் நந்த குமாரனும்)

புல்லாங் குழலின் இனிமை யினாலே
உள்ளமே ஜில் லெனெத் துள்ளாதா
ராகத்திலே அனு ராக மேவினால்
ஜகமே ஊஞ்சலில் ஆடாதா

(பிருந்தா வனமும் நந்த குமாரனும்)

கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால்
தன்னையே மறந்திடச் செய்யாதா
ஏனோ ராதா இந்தப் பொறாமை
யார்தான் அழகால் மயங்கா தவரோ

(பிருந்தா வனமும் நந்த குமாரனும்)


இன்று Jul 24, 2007 - பதிவர் CVR அவர்களின் பிறந்த நாள் நேயர் விருப்பம்! மெலடி ரசிகரான அவருக்குக் கண்ணன் பாட்டில் அனைத்து நண்பர்களின் சார்பாகவும்...."Happy Birthday CVR!"

படம்: மிஸ்ஸியம்மா (மிஸ் மேரி என்று இந்தியில் வந்தது)
இந்தியில் இதே பாட்டு எப்படி வரும் என்று யாராச்சும் வந்து போலோ, ப்ளீஸ்!:-)

வரிகள்: T.N. ராமையா தாஸ்
குரல்: A.M.ராஜா, P.சுசீலா
இசை: S.ராஜேஸ்வர ராவ்

ராகம்: ச்யாமா
அப்படின்னு தான் நினைக்கிறேன். சங்கராபரணம் படத்துல "மானச சஞ்சரரே"-ன்னு ஒரு பாட்டு வரும்! சதாசிவப் பிரம்மம் எழுதியது! கிட்டத்தட்ட அந்த ராகம் மாதிரி தான் தெரியுது!
இசை வாணர்கள், அடியேன் தப்பா சொல்லியிருந்தா, கோச்சிக்காம வந்து திருத்தி விடுங்க!


யாவருக்கும் பொதுச் செல்வம் - பலப் பல கண்ணன்கள்!

22 comments :

CVR said...

ஜி படப்பாடல் இதற்கு முன் கேட்டதில்லை,இப்பொழுது தான் கேட்டேன் . "பிருந்தா வனமும்.." பாட்டு நான் பெரிதும் விரும்பி ரசிக்கும் மெலடி என்பதால் அந்த ஜி பாட்டை கேட்கும் போது ஒரு மிக அழகான மெட்டை குத்தி கிழித்து சித்திரவதை செய்வதை போன்று இருந்தது. இரண்டு வரிகளுக்கு மேல் கேட்க முடியவில்லை.
எங்கிருந்துதான் உங்களுக்கு இந்த பாட்டு எல்லாம் கிடைக்கிறதோ!!!

பாடலின் ஓபெனிங் பீஸ் பியானோ,கடம்,வயலின் போன்ற கருவிகளை பெரும்பான்மையாக கொண்டு இசைக்கப்பட்டது போல் தெரிகிறது.

"யாவருக்கும் பொது செல்வம் அன்றோ" என்ற பாடி முடித்த பிறகு வரும் இசை குழலினிசை.
இந்த பகுதியை தான் நீங்கள் கேட்டீற்களா என்று சரியாக தெரியவில்லை.

அழகான பாடல்!!
கேட்க வைத்ததற்கு நன்றி!! :-)

ILA (a) இளா said...

எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் இது. நன்றி

CVR said...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணா!! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பிருந்தா வனமும்.." பாட்டு நான் பெரிதும் விரும்பி ரசிக்கும் மெலடி என்பதால் அந்த ஜி பாட்டை கேட்கும் போது ஒரு மிக அழகான மெட்டை குத்தி கிழித்து சித்திரவதை செய்வதை போன்று இருந்தது//

வித்யாசாகரைத் தான் நீங்க கேக்கணும்.
என்னைக் கேட்டா நான் என்ன சொல்ல Birthday Boy? :-)

//பாடலின் ஓபெனிங் பீஸ் பியானோ,கடம்,வயலின் போன்ற கருவிகளை பெரும்பான்மையாக கொண்டு இசைக்கப்பட்டது போல் தெரிகிறது//

இல்லையே! ஜலதரங்கமா அது?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ILA(a)இளா said...
எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் இது. நன்றி
//

ஹைய்யா...
விவசாயி நம்ம பதிவுக்கு வந்துட்டாரு டோய்! :-)

வாங்க இளா! நந்த குமாரன் பிடிக்குமா? நொந்த குமாரன் பிடிக்குமா? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இந்த ராகம் ஆரபி-ன்னு ஒருத்தர் தொ(ல்)லைபேசினாரு-ப்பா!
அச்சோ..இந்த ராகங்களுக்கும் நமக்கும் அப்படி என்ன ஒரு சண்டை! நாம ஒண்ணு சொல்லி, அடுத்தவங்க இன்னொன்னு சொல்லி...குட்டு/திட்டு:-)

இசை இன்பத்துல ஜீவா கிட்ட கண்டுபுடிக்க டிப்ஸ் கேட்கணும்!

ப்ரசன்னா said...

இது ஆரபி என்றுதான் நானும் எங்கோ கேள்விப்பட்ட ஞாபகம். நல்ல பாடல். இதே பாடல் தெலுங்கிலும் உண்டு ஒருமுறை கேட்டிருக்கிறேன்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வாங்க ப்ரசன்னா! ஒங்க ஓட்டு ஆரபிக்கா? ஹ்ஹூம்..சரி
அந்த இந்திப் பாட்டு யாராச்சும் சொல்லுங்கப்பா!

அன்புத்தோழி said...

//கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் தன்னையே மறந்திடச் செய்யாதா ஏனோ ராதா இந்தப் பொறாமை யார்தான் அழகால் மயங்கா தவரோ//

கண்ணனின் லீலைக்கு தான் அளவே இல்லையே. அவனது சிறு வயது லீலையானாலும் சரி, வாலிப லீலைகளும் சரி எல்லாவற்றிலுமே ஒரு அர்த்தம் இருக்கும். போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே. நல்ல பதிவு திரு KRS.

திரு CVR அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவி சங்கர்!
என் இளமைக்காலப் பாட்டப்பா இது.இனிய பாட்டு.
CVR அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

CVR said...

@அன்புத்தோழி
வாழ்த்துக்களுக்கு நன்றி! :-)

@யோகன் பாரிஸ்

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவி சங்கர்!
என் இளமைக்காலப் பாட்டப்பா இது.இனிய பாட்டு.
CVR அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள//

உங்களுக்கு இது இளமைக்கால பாட்டு என்றால் நான் நிச்சயமாக உங்கள் அண்ணனாக இருக்க முடியாது தலைவா!! :-)
கே.ஆர்.எஸ் என்னை கேலி செய்வதற்காக அண்ணா என்று அழைக்கிறார்!!
அதை பார்த்து ஏமாற வேண்டாம்!! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அன்புத்தோழி said...
அவனது சிறு வயது லீலையானாலும் சரி, வாலிப லீலைகளும் சரி எல்லாவற்றிலுமே ஒரு அர்த்தம் இருக்கும்.நல்ல பதிவு திரு KRS//

வாங்க அன்புத்தோழி!
இந்த வலைப்பூ துவங்கும் போது, கண்ணன் என்னும் பாட்டுக்கள் எல்லாம் தொகுக்க மிகவும் ஆசைப்பட்டோம்! அவ்வளவு பாட்டுக்கள் உள்ளனவா என்றும் ஒரு ஐயம்....ஆனா போகிற போக்கைப் பார்த்தா, 200, 300 என்று பாட்டுக்கள் குவியும் போல் இருக்கு! வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் போல!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ரவி சங்கர்!
என் இளமைக்காலப் பாட்டப்பா இது.இனிய பாட்டு.//

ஆமாங்க யோகன் அண்ணா. பாட்டு சிறுசா இருந்தாலும் கீர்த்தி பெருசு!

எனக்கு இளமைக் காலப் பாட்டல்ல, அண்மையில் தான் அறிமுகம் ஆச்சி! :-) (அப்படித் தானே CVR?)

மலைநாடான் said...

இரவி! எனக்கும் இந்தப்பாடல் ரொம்பப் பிடிக்கும். ஏனென்பதை அறியவிருப்பமா? ஏலவேஇங்கு சொல்லியுள்ளேன்.

பதிவுக்கு பாடலுக்கும் நன்றி

குமரன் (Kumaran) said...

மிக நல்ல பாடல் இது இரவிசங்கர். பாடல் வரிகள் ஒவ்வொன்றும் நல்ல மயக்கத்தைத் தரும். :-)

காலம் தாழ்த்திய பிறந்த நாள் வாழ்த்துகள் CVR.

jeevagv said...

ரவி,
இந்த பாடல் ஷ்யாமா ராகம்தான்!

இந்த பாடல் - முகமது ரஃபி, லதா மங்கேஷ்கர் பாடிய ஹிந்தி பாடலின் காப்பி தான்! காப்பி என்றாலும், குறை ஒன்றும் இல்லை!

மூலம் இங்கே

jeevagv said...

பின்னூட்டம் இட்ட பின் கூகிளில் தேடிப் பார்த்ததில், ஹிந்தி படம் மிஸ் மேரி தமிழ் மிஸ்ஸியம்மா விற்கு பின் தான் வெளி வந்துள்ளது, 1957 இல்.
ஆக, ஹிந்தி மூலம் அல்ல!
மிஸ்ஸியம்மா தமிழிலும் தெலுங்கிலும் முதலில் வந்ததாம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மலைநாடான் said...
இரவி! எனக்கும் இந்தப்பாடல் ரொம்பப் பிடிக்கும். ஏனென்பதை அறியவிருப்பமா? ஏலவேஇங்கு சொல்லியுள்ளேன்.//

பார்த்தேன் மலைநாடன்.
தங்கள் தாயார் பற்றிய பதிவு. ஒரு முறைக்கு இரண்டு முறை வாசித்தேன்! நெகிழ்ச்சியாக இருந்தது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
மிக நல்ல பாடல் இது இரவிசங்கர். பாடல் வரிகள் ஒவ்வொன்றும் நல்ல மயக்கத்தைத் தரும். :-) //

ஆமாம் குமரன்.
மயக்கும் பாட்டு தான்! இன்ப மயக்கம்!:-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...
ரவி,
இந்த பாடல் ஷ்யாமா ராகம்தான்!//

அப்பாடா...நம்ம கட்சியில் ஒருத்தர் இருக்காரே! :-)

//இந்த பாடல் - முகமது ரஃபி, லதா மங்கேஷ்கர் பாடிய ஹிந்தி பாடலின் காப்பி தான்! காப்பி என்றாலும், குறை ஒன்றும் இல்லை!
மூலம் இங்கே//

பாடலுக்கு நன்றி ஜீவா!
அருமையா இருக்கு!

ஆனா காப்பி இல்லை என்று தான் நினைக்கிறேன். தமிழ் தான் மூலப் பாட்டு. பின்னர் தான் ஹிந்தியில் மிஸ் மேரி ஆன போது, இந்தப் பாட்டை மட்டும் மாற்றாமல் அப்படியே வைத்தார்களாம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...
பின்னூட்டம் இட்ட பின் கூகிளில் தேடிப் பார்த்ததில், ஹிந்தி படம் மிஸ் மேரி தமிழ் மிஸ்ஸியம்மா விற்கு பின் தான் வெளி வந்துள்ளது, 1957 இல்.
ஆக, ஹிந்தி மூலம் அல்ல!
மிஸ்ஸியம்மா தமிழிலும் தெலுங்கிலும் முதலில் வந்ததாம்!//

ஓ...சரி சரி...
உங்களின் இந்தப் பின்னூட்டத்தைக் கவனியாமல், நான் பாட்டுக்கு முந்தின பின்னூட்டத்துக்குப் பதில் சொல்லிட்டேன்! :-)

Anonymous said...

ravi, konjam neram, work ikku naduvil intha paattai kaettu antha brinthavanathukke senta maathiri oru prammai - kan moodi kettuparunkal - as you told, rathai yaiyum kannanaiyum paarkalam
ithu avaravarkalin prammaiyai poruthathu - enjoyed hindi song also - nice -raagathai parti ontum theriyathu but i can enjoy it.
nanti unkal rasanaikae -
athanal thaan intha pathivae illaiya
unkalin oruvar rasanaiyil ellorum nanaikirom
then.... sethu maathavaa (2) Radha, Radha.. nee enke
baskar

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP