Tuesday, January 09, 2007

30. வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி!

சிப்பிக்குள் முத்து என்ற படத்தில் சிறப்பான ஒரு பாடல்!
இதே பாடல், ஸ்வாதி முத்யம் என்ற தெலுங்கு படத்திலும் சிறப்பாக இருக்கும்!
கேட்க இங்கே சொடுக்கவும்.


kris2

லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி
வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
குறும்பான கண்ணனுக்குச் சுகமான லாலி
ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி

(வரம் தந்த சாமிக்கு)
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ

கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே
யது வம்ச வீரனுக்கு யசோதை நானே
கரு யானை முகனுக்கு மலையன்னை நானே
பார் போற்றும் முருகனுக்குப் பார்வதியும் நானே

(வரம் தந்த சாமிக்கு)
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ

ஆனந்தக் கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே
ஸ்ரீராமன் பாட வந்த கம்ப நாடன் நானே
ராம ராஜனுக்கு வால்மீகி நானே
ஆகாய வண்னனுக்குத் தியாகைய்யர் நானே

115858699_771cce968c


(வரம் தந்த சாமிக்கு)
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ

மார்கழி 26 - மாலே மணிவண்ணா - இருபத்தாறாம் பாமாலை


பாடல்: வரம் தந்த சாமிக்கு
படம்: சிப்பிக்குள் முத்து
வரிகள்: வைரமுத்து
இசை: இளையராஜா
குரல்: பி.சுசீலா

27 comments :

கோவி.கண்ணன் [GK] said...

கண்ணபிரான்,

நான் அடிக்கடி கேட்டு மகிழும் பாடல்.

எழுதியவர் கவியரசு வைரமுத்துதானே ?

வடுவூர் குமார் said...

ஆந்திராவில்,இந்த படத்தை தெரு ஓரத்தில் ஒரு வீட்டில் VCR யில் போட்டு பார்த்துக்கொண்டிருந்த போது ஏதேச்சையாக பார்த்தேன்.
அருமையான இசை மற்றும் வரிகள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் [GK] said...
கண்ணபிரான்,
நான் அடிக்கடி கேட்டு மகிழும் பாடல்//

குறும்பான கண்ணனுக்குச் சுகமான லாலி என்று வருகிறதே! GK ஐயா, பாருங்க உங்க பேரில் தான் எத்தனை பாடல்கள், காவியங்கள்!
ஹூம் இதுக்குப் பேர் தான் பேர் ராசியோ? :-))

//எழுதியவர் கவியரசு வைரமுத்து தானே ?//

கவியரசு வைரமுத்து அவர்கள் தான் என்று நினைக்கிறேன்!
யாராச்சும் வந்து உறுதியாச் சொன்ன பின்னர் பதிவில் போடலாம் என்று இருந்தேன்! நீங்களும் சொல்லி வீட்டீர்கள்! பதிவில் இட்டு விடுகிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வடுவூர் குமார் said...
ஆந்திராவில்,இந்த படத்தை தெரு ஓரத்தில் ஒரு வீட்டில் VCR யில் போட்டு பார்த்துக்கொண்டிருந்த போது ஏதேச்சையாக பார்த்தேன்.
அருமையான இசை மற்றும் வரிகள்.//

நன்றி குமார் சார்!
இன்னும் உருக்கமான பாடல்கள் இந்தப் படத்தில் உள்ளன...அதுவும் சீதையின் மனநிலையைச் சொல்லும் பாடல்...அப்பப்பா!

Unknown said...

பாட்டுக்கு நன்றி கண்ணபிரான்.சிப்பிக்குள் முத்தில் துள்ளி,துள்ளி வந்தாயம்மா எனும் பாடலும் மிகவும் அருமையாக இருக்கும்.

இலவசக்கொத்தனார் said...

ஒரு பாடல் தவிர இந்த படத்தில் மீதி எல்லா பாடல்களுமே பிடிக்கும். அருமையான படம். கமல் நடிப்பைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

ஞானவெட்டியான் said...

நான் உறங்கிவிட்டேன்!!

VSK said...

Movie Sippikul Muthu
Song Laaly laaly
Singer Suseela
Lyrics Vairamuthu
Laaly laaly laaly laaly
கோவியாருக்கு ஜே!
:))

குமரன் (Kumaran) said...

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருள் ஏலோர் எம்பாவாய்

திருமாலே! நீலமணிவண்ணனே! மார்கழி நீராட்டத்திற்கு பெரியவர்கள் செய்யும் முறைகளைச் சொல்கிறோம் கேட்டருள்வாய். உலகங்கள் எல்லாம் நடுங்கும் படி ஒலிக்கும் பால் நிறம் கொண்டு உன் பாஞ்சசன்னியம் போன்ற சங்குகள் வேண்டும். மிகப்பெரிய பறைகள் வேண்டும். உன் பெருமைகளைச் சொல்லிப் பல்லாண்டு பாடுபவர்கள் வேண்டும். அழகிய விளக்குகள் வேண்டும். கொடிகள் வேண்டும். பந்தல்கள் வேண்டும். ஆலிலை மேல் துயின்றவனே. இவற்றை எல்லாம் எங்களுக்குத் தந்து அருள வேண்டும்.

ஷைலஜா said...

ஏற்கனவே கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லிக் கொண்டு யமுனைஆற்றினில் ஈரக்காற்றினில் நின்னையே ரதியென்று (சந்தானம் குரலில்) பாடுவதைக் கேட்டபடி மெய் மறந்து இருக்கிறேன்.ரம்மியமான இசையில் இனிமையான குரலில்
லாலி பாட்டு அளித்து உறங்க வைத்துவிட்டீர்கள்
அடுத்து என்னவோ?
ஷைலஜா

G.Ragavan said...

வைரமுத்து எழுதிய வரிகள்தான். மிகவும் இனிமையான பாடல். பெரும்பாலும் தாலாட்டுத்தனமாக வரும் பாடல்களை இளையராஜா சுசீலாவிற்கே குடுத்திருக்கிறார். கண்ணன் ஒரு கைக்குழந்தை, கற்பூர பொம்மை ஒன்று, மனதில் ஒரே ஒரு பூ பூத்தது, மனதிலே ஒரு பாட்டு...இந்த மாதிரி...அப்படி இந்தப் பாட்டையும் கொடுத்திருக்கிறார். இந்தப் பாடலை மேடையில் பி.சுசீலா பாடக் கேட்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. மிகவும் அருமையான இனிய பாடல்.

சேதுக்கரசி said...

பார்த்தீர்களா, இன்றும் என்னை வரவழைத்துவிட்டீர்கள் :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//செல்வன் said...
பாட்டுக்கு நன்றி கண்ணபிரான்.சிப்பிக்குள் முத்தில் துள்ளி,துள்ளி வந்தாயம்மா எனும் பாடலும் மிகவும் அருமையாக இருக்கும்.//

ஆமாம் செல்வன்; துள்ளி துள்ளி பாடலில் சீதையின் ஏக்கங்கள் அருமையாக வெளிப்படும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
ஒரு பாடல் தவிர இந்த படத்தில் மீதி எல்லா பாடல்களுமே பிடிக்கும். அருமையான படம். கமல் நடிப்பைப் பற்றி சொல்லவே வேண்டாம்.//

அதானே!
சரி அதென்ன கொத்ஸ் "ஒரு பாடல் தவிர" - ?
பொத்தனார் பொடி வைத்தார்!:-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஞானவெட்டியான் said...
நான் உறங்கிவிட்டேன்!! //

நான் பதிவைப் போடும் பாதி வேளையிலேயே உறங்கி விட்டேன் ஞானம் ஐயா! மீதிப் பதிவை யார் போட்டது? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//SK said...
Movie Sippikul Muthu
Song Laaly laaly
Singer Suseela
Lyrics Vairamuthu
Laaly laaly laaly laaly
கோவியாருக்கு ஜே!
:)) //

SK ஐயா,
கோவியாருக்கு ஜே-வா?
கோவியாருக்கு லாலி-யா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷைலஜா said...
இனிமையான குரலில்
லாலி பாட்டு அளித்து உறங்க வைத்துவிட்டீர்கள்
அடுத்து என்னவோ?//

அடுத்து உங்க ஃபேவரிட்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்//

காதலிலும் மரபைக் காக்கிறாள் ஆண்டாள்! மேலையார் செய்வனகள் என்று சொல்லி மரபுக்கு மதிப்பளிக்கும் மாண்பு!
நன்றி குமரன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said...
வைரமுத்து எழுதிய வரிகள்தான்.//

அப்பாடா! :-)

//இந்தப் பாடலை மேடையில் பி.சுசீலா பாடக் கேட்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.//

ஓ நாங்களும் உங்கப் பதிவில் படித்தோமே! அவர் கன்னத்தில் இவர் அறைந்தார் என்று! அந்த நிகழ்ச்சி தானே ஜிரா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சேதுக்கரசி said...
பார்த்தீர்களா, இன்றும் என்னை வரவழைத்துவிட்டீர்கள் :-) //

கண்ணன் தான் வரவழைத்தான்!
அவனைப் பிடித்து திட்டுங்கள்! :-)

பாலராஜன்கீதா said...

அந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் "மனசு மயங்கும் மௌன கீதம்"

// அதானே!
சரி அதென்ன கொத்ஸ் "ஒரு பாடல் தவிர" - ?
பொத்தனார் பொடி வைத்தார்!:-) //

பட்டுச் சீல தரேன்னுன்னு படகேறி......?

ஜெயஸ்ரீ said...

//ஆனந்தக் கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே
ஸ்ரீராமன் பாட வந்த கம்ப நாடன் நானே
ராம ராஜனுக்கு வால்மீகி நானே
ஆகாய வண்னனுக்குத் தியாகைய்யர் நானே//

எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.

அருமையான பாடலை அளித்ததற்கு நன்றி.

சாத்வீகன் said...

அருமையான தாலாட்டு பாடல்.

அதே படத்தில் "ராமன் கதை கேளுங்கள்" பாடலும் மிக அருமையாக இருக்கும்.

Anonymous said...

பாடலை படித்து/கேட்டதில் பின்னூட்டமிட முடியாதபடி நித்திரா தேவி அழைத்துவிட்டாள்....அதனால் தான் லேட்...

மெளலி...

Anonymous said...

ரவி சங்கர்!
இப் படப்பாடல்கள் யாவும் கர்நாடக இசை ராகங்களில் அமைந்து பலர் கருத்தைக் கவர்ந்தது. படமும் நல்ல உணர்வுபூர்வமானது.
எப்போதும் கேட்கலாம்.
யோகன் பாரிஸ்

Wendy said...

Movie Sippikul Muthu Song Laaly laaly Singer Suseela Lyrics Vairamuthu Laaly laaly laaly laaly கோவியாருக்கு ஜே! :))

Unknown said...

வடுவூர் மன்னை பக்கம் வடுவூரா

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP