Friday, December 15, 2006

5. செம்பவள வாய்திறவாய் யதுகுல கண்ணா!

இப்பதிவு அன்பர் மதுமிதா அவர்களின் சார்பாக!
அவரே கண்ணனுக்காக எழுதிய பாடல்!
இந்தப் பாடல் மதுரை வானொலியில் இசையமைக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. நாள்: Oct 19, 1996 - மாலை 6.45 மணி

இந்தப் பாடலை, இன்று மார்கழி முதல் நாளில்,
கண்ணன் பாட்டு வலைப்பூவில், முதல் மாலையாகச் சமர்ப்பிக்கிறோம்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!



சின்ன சின்ன கண்ணா



கண்ணா கண்ணா கண்ணா கண்ணா
சின்னச் சின்ன கண்ணா
கோகுல மன்னா
செம்பவள வாய்திறவாய் யதுகுல கண்ணா
செம்பவள வாய்திறவாய் கோகுல மன்னா



வெண்ணைய் உண்ட கண்ணனே
உனைக் காணவந்த அன்னைக்கு
சிறுவாய் திறந்து அற்புதமாய்
அகிலம் தனைக் காட்டினாய்


காளிங்கன் தலைமீது களிநர்த்தனம் செய்து
நச்சுப்பொய்கை தனையே பரிசுத்தம் செய்தாய்
கோபம்கொண்ட இந்திரனும் கொடுமழை தந்தான்
கோவர்த்தன கிரிஎடுத்து யதுகுலம் காத்தாய்


பாஞ்சாலியின் மானத்தைப் பெருஞ்சபையில் காத்தாய்
பார்த்தன்தன் மயக்கத்தை குருஷேத்திரத்தில் தீர்த்தாய்
பெற்றோம் உன் கீதை
கண்டோம் உன் லீலை
நல்வாழ்க்கை வாழத் தந்தாய் புதுப்பாதை,

தந்தாய் புதுப்பாதை...
கண்ணா கண்ணா

செம்பவள வாய்திறவாய் யதுகுல கண்ணா
செம்பவள வாய்திறவாய் கோகுல மன்னா


குறிப்பு:
1. பாடல், கேசட்டில் இருப்பதால் வலையேற்ற இயலவில்லை
2. ஒரு கோகுலாஷ்டமி இரவில் உள்ளம் உருக, அதிகாலையில் எழுதியது.
3. கண்ணன் "வாய் திறவாய்" படம் - நன்றி: krishna.com

மதுமிதா அவர்கள் தொடர்புடைய சுட்டிகள்:
வலைப்பூ-காற்றுவெளி
மரத்தடி ஆக்கங்கள்
நிலாச்சாரல் பேட்டி
திண்ணை ஆக்கங்கள்



மார்கழி 1 - மார்கழித் திங்கள் - முதல் பாமாலை

14 comments :

குமரன் (Kumaran) said...

அருமையான பாடல். கண்ணனைப் பற்றி நினைத்தாலே எதெல்லாம் நினைவிற்கு வருமோ அதெல்லாம் இந்தப் பாடலில் இருக்கிறது.

நாமக்கல் சிபி said...

அழகான பாடல்

ஞானவெட்டியான் said...

செங்கிருதம் மொழிபெயர்க்கும்
செந்தமிழ்ச் செல்வியின்
"செம்பவள வாய்திறவாய் கோகுல கண்ணா"
உம்பவருக்கும் உவகையூட்டுமே!

மதுமிதா said...

மாதாத்தின் முதல் நாளில்
உள்ளம் உருகுகிறது
மனமார்ந்த நன்றி

ஞானவெட்டியான் said...

மன்னிக்கவும்.
"செங்கிருதம் மொழிபெயர்க்கும்
செந்தமிழ்ச் செல்வியின்
"செம்பவள வாய்திறவாய் கோகுல கண்ணா"
உம்பருக்கும் உவகையூட்டுமே!"
என இருத்தல் வேண்டும். கொத்துப்பிழை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

௧ண்ணன் பாட்டு வலைப்பூவிற்கு அன்பர்கள் பலர், பாடல்கள் அனுப்பி உள்ளனர்.
ஞானவெட்டியான் ஐயா,
மதுமிதா அக்கா,
பெங்களூரில் இருந்து சுதா,
சாத்வீகன்,
பிரேம்குமார் சண்முகமணி,
பாலராஜன் கீதா
இன்னும் பலர். கூட்டு முயற்சியின் சிறப்பே தனி!
இவர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி! அதோடு குமரன், பாலாஜி, அடியேன்.

அந்தப் பாடல் மலர்களை எல்லாம் ஒவ்வொன்றாய்த் தொடுத்து, தினம் ஒரு மாலையாக கண்ணன் பாட்டில் இட எண்ணம்!
பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை - பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு!
நாமும் தினம் ஒன்றாய் இந்த மார்கழியில் தொடுத்துக் கொடுப்போம்! என்ன, சரி தானே நண்பர்களே?

Anonymous said...

கண்ணன் கதையை கச்சித்தமாக
நிறைத்து விட்டார்.
இவ்விடத்தில் கேட்பது சரியா
தெரியவில்லை. தவறானால் மன்னிக்கவும்,
சமஸ்கிரதம்
படிக்க விரும்புகிறேன். என்னைப்
போல் பலர் இருப்பார்கள்
என நினைக்கிறேன். உதவ
முடியுமா? நன்றி.

ஞானவெட்டியான் said...

அன்பு அனானி,
இராசபாளையம் சென்றால் செங்கிருதம் பிழையின்றிக் கற்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

கண்ணனே இனிமை. அவனை மார்கழியில் நினைப்பது இனிமை.
மனசால் நினைத்து வாயால் பாடி
தூய்மை பெறுவோம்.
வலையில் பாவையையும் கண்ணனையும் சேர்த்து வைக்கும்
எங்களையும் நல்வழிப்படுத்தும்
உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

Anonymous said...

//இராசபாளையம் சென்றால் செங்கிருதம் பிழையின்றிக் கற்கலாம்.//

நீங்கள் அறியத்தந்தமைக்கு
மிக்க நன்றி ஐயா.

ஆனால் அதெல்லாம் நடக்க முடியாத
விடயங்களையா. வலைத்தளங்களின்
மூலம் அறிய முடியுமானால் அறிந்து
கொள்வோம்.

உங்கள் பதிவில் திருவெம்பாவையும்
படித்தேன். மிக்க நன்றி.

மதுமிதா said...

/// ஞானவெட்டியான் said...
செங்கிருதம் மொழிபெயர்க்கும்
செந்தமிழ்ச் செல்வியின்
"செம்பவள வாய்திறவாய் கோகுல கண்ணா"
உம்பருக்கும் உவகையூட்டுமே///

நன்றி ஞானவெட்டியான் ஐயா

மதுமிதா said...

///Anonymous said...
கண்ணன் கதையை கச்சித்தமாக
நிறைத்து விட்டார்.
இவ்விடத்தில் கேட்பது சரியா
தெரியவில்லை. தவறானால் மன்னிக்கவும்,
சமஸ்கிரதம்
படிக்க விரும்புகிறேன். என்னைப்
போல் பலர் இருப்பார்கள்
என நினைக்கிறேன். உதவ
முடியுமா? நன்றி. ///


அனானி எங்கே இருக்கிறீர்கள்
ஊரைச்சொன்னால் எங்கே கற்கலாம் என்ற விபரம் சொல்லலாம்.

இல்லையெனில் வலைப்பூவில் கற்றுத்தரச் சொல்கிறீர்களா?
விளக்கமாகக் கேட்கவும்.

G.Ragavan said...

செம்பவழ வாய் திறந்து....அம்மா எனவா?
வெண்ணய் உண்ணவா?
மண்ணை உண்ணவா?
உலகைக் காட்டவா?
மறைகள் சொல்லவா?
என்றெல்லாம் கண்ணனைக் கேட்க வைக்காமல் என்னென்ன செய்ய வேண்டுமென்று நீங்களே சொல்லி விட்டீர்கள். :-)

குமரன் (Kumaran) said...

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்!
நீராடப் போதுவீர்; போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய்

மார்கழித் திங்கள் நிறைமதி நாளாகிய நல்ல நாள் இன்று. மார்கழி நீராட வருகின்றவர்களே. சிறந்த அணிகலங்கள் அணிந்தவர்களே வாருங்கள். செல்வம் பொங்கும் திருவாய்ப்பாடியின் செல்வ சிறுமியர்களே! கூர்மையான வேலைக் கொண்டு தீயவர்களை அழிக்கும் தொழிலையுடைய நந்தகோபனின் திருக்குமரனும் நீண்ட அழகிய கண்களையுடைய யசோதையின் சிங்கக்குட்டியும் கரியமேகம் போல் உடலைக் கொண்டவனும் சிவந்த கண்களைக் கொண்டவனும் கதிரவனைப் போலும் மதியைப் போன்றும் முகத்தை உடையவனும் ஆன நாராயணனே நமக்கே விருப்பங்களையெல்லாம் அருளுவான். உலகத்தவர் போற்றும் படி நீராடுவோம்.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP