Saturday, December 09, 2006

2. அலைபாயுதே கண்ணா

மிகப் பிரபலமான அலைபாயுதே கண்ணா...பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - இது திரைப்படப் பாடல்; ஏ.ஆர்.ரகுமான் இசையில்

மற்ற கலைஞர்கள் பாடிடும் பாடல் சுட்டிகளும்,
நாதஸ்வரம் மற்றும் இன்ன பிற இசைக்கருவிகளிலும் "அலை பாயுதே" பாடலைக் கேட்க வேண்டுமா?
பதிவின் இறுதியில் சுட்டிகள் உள்ளன!



அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்

(அலைபாயுதே)

நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரம் ஆவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என் மனம்

(அலைபாயுதே)

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே - உன்
திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் மருகுதே


கதித்த மனத்தில் உருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்தவா - ஒரு
தனித்த வனத்தில் அணைத்து எனக்கு

உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

கரைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையறு கழல் எனக்கு அளித்தவா
கதறி மனமுருக நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ


இது தகுமோ இது முறையோ
இது தருமம் தானோ
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே
மனதில் வேதனை மிகவொடு

(அலைபாயுதே)



Nadaswaram = Sheik Chinna Moulana Sahib
Nadaswaram = Thiruvizha Jaishankar
Saxaphone = Kadri Gopalnath
Violin = Ganesh-Kumaresh Violin
Jaladharangam = Ananyampatti S Dhandapani
Mandolin = U Srinivas

Chitra
Maharajapuram Santhanam
Sudha Raghunathan
KJ Yesudas
Bombay Sisters

நன்றி: MusicIndiaOnline.com; karanatik.com



பாடல்: அலை பாயுதே
பாடியவர்: ஹரிணி, கல்யாணி மேனன், நெய்வேலி ராமலக்ஷ்மி
எழுதியவர்: ஊத்துக்காடு வேங்கட கவி

ராகம்: கானடா
தாளம்: ஆதி
படம்: அலை பாயுதே

28 comments :

குமரன் (Kumaran) said...

இது மிக உன்னதமான ஒரு பாடல் இரவிசங்கர். இந்தப் பாடலை ஏன் எனது 'கேட்டதில் பிடித்தது' வலைப்பூவில் இதுவரை இடவில்லை என்று சில நேரம் நினைப்பேன். இப்போது தான் புரிகிறது. இதற்குரிய இடம் இந்த வலைப்பூ என்பது. :-)

குமரன் (Kumaran) said...

இந்தப் பாடலைப் பல பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். என்னிடம் பலர் பாடிய ஒலிப்பேழைகள் இருக்கிறது. இது கர்நாடக சங்கீத மேடையில் மிக மிகப் பிரபலமான பாடல். நாதஸ்வரக் கலைஞர்களுக்கும் மிகப் பிடித்த பாடல். எல்லாத் திருமணங்களிலும் இந்தப் பாடலை வாசித்துவிடுவார்கள். :-)

குமரன் (Kumaran) said...

படங்களும் மிக அருமை. ஆண்டாள் படத்தை உங்கள் அனுமதியோடு சேமித்து வைத்திருக்கிறேன். என் அடுத்த 'கோதைத் தமிழ்' பதிவில் அந்த படத்தினை இடலாம் என்று இருக்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குமரன்
இந்தப் பதிவு தமிழ்மண முகப்பில், முதலில் தெரியவில்லை! அதை அருமையாக வெளிக் கொணர்ந்து கொடுத்தீர்களே! நன்றி!

//இப்போது தான் புரிகிறது. இதற்குரிய இடம் இந்த வலைப்பூ என்பது. :-)//

அதானே; மற்றவர் காதல் எல்லாம் அந்த வலைப்பூவில்!
கண்ணனின் காதலுக்குத் தனி வலைப்பூ அல்லவா? :-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இது கர்நாடக சங்கீத மேடையில் மிக மிகப் பிரபலமான பாடல். நாதஸ்வரக் கலைஞர்களுக்கும் மிகப் பிடித்த பாடல்//

முதலில் கர்நாடக சங்கீதமாய்த் தான் கொடுக்க நினைத்தேன் குமரன்!

சரி ஏ.ஆர். ரகுமான் தான் இதை ட்ரம்ஸில் போட்டு பட்டையைக் கிளப்பி உள்ளாரே என்று, திரைப்படப் பாடலாகவே கொடுத்து விட்டேன்!

நீங்கள் நாதஸ்வரம் என்று சொன்னவுடன் ஆசை வந்து விட்டது!
இதோ, பல இசை வாத்தியங்களில் இது வாசிக்கப்படும் சுட்டியையும் பதிவில் தந்து விடுகிறேன்!!

VSK said...

//கரைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையறு கழல் எனக்கு அளித்தவா//


சேர்த்துப் பாடுகையில் "எனக் களித்தவா" என வரும்!

அதுவும் பொருளுடன், "கரைகடலில் தன் பதம் பதித்து ஆடிக் களித்தவன் என வருவது மேலும் ஒரு சிறப்பு இப்பாடலுக்கு!

எவ்வளவு முறை கேட்டாலும், யார் பாடிக் கேட்டாலும் அலுக்காத பாடல்களில் இதுவும் ஒன்று!

நன்றி, ரவி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said:
ஆண்டாள் படத்தை உங்கள் அனுமதியோடு சேமித்து வைத்திருக்கிறேன்//

குமரன்
அடியேன் "அனுமதியா"? "அனுமதி" எல்லாம் பார்த்தால் கோதைத் தமிழ் தான் நமக்கெல்லாம் கிட்டியிருக்குமோ?

அழகாக எடுத்து உங்கள் பதிவில் போட்டால் இன்னும் பலரைச் சென்றடையாதோ? தாராளமாகப் பதிவிடுங்கள்!

சிறு வயதில் சேர்த்து வைத்த ஆயில் பெயிண்டிங் படங்களைக் கூட scan செய்து வலையேற்ற எண்ணம். சீக்கிரம் செய்ய வேண்டும்!

குமரன் (Kumaran) said...

ஆமாம் இரவி. இந்தப் பாடல் பலரையும் சென்றடைந்ததற்கு திரைப்படத்தில் வந்ததே காரணம். ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. இந்தப் படம் வந்த போது நடந்தது. ஒரு நண்பருடன் அவருடைய காரில் அலுவலகம் செல்வதற்காக ஏறி அமர்ந்த போது அவர் 'குமரன். உங்களுக்கு இந்த பாட்டு பிடிக்கும்ன்னு நினைக்கிறேன்' என்று சொல்லி 'அலை பாயுதே' திரைப்படப் பாடலை இட்டார். நானும் 'ஆமாம். எனக்கு பிடிக்கும். சின்ன வயசுல இருந்து பாடுவேன்' என்று சொன்னவுடன் அவர் திகைத்துவிட்டார். 'இப்பத் தானே இந்தப் பாட்டு வந்திருக்கு. நீங்க சின்ன வயசுல இருந்து பாடுவேன்னு சொல்றீங்க?' என்றார். பின்னர் இது பிர்பல கர்நாடக இசைப்பாடல் என்று விளக்கினேன். அவர் அதற்கு 'எப்படியோ. எனக்கெல்லாம் இந்தப் பாட்டு சினிமாவுல வந்தாத் தான் தெரியும்' என்றார். :-)

பகீ said...

அருமையான பாடல். கேட்கும் போது மனம் இலேசாகிவிடும்

நன்றி

ஊரோடி பகீ

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//'இப்பத் தானே இந்தப் பாட்டு வந்திருக்கு. நீங்க சின்ன வயசுல இருந்து பாடுவேன்னு சொல்றீங்க//

குமரன் :-))
நாதஸ்வரம் மற்றும் சில பல இசைக்கருவிகள் சுட்டி இட்டு விட்டேன்; பார்த்தீர்களா?
One stop shop ஆக இருக்கட்டும்! :-)

G.Ragavan said...

ஒரு உண்மை சொல்கிறேன். இந்தப் பாடலை முதலில் திரையில் பயன்படுத்தியர் இசைஞானிதான். எஸ்.ஜானகி பாடிய பாடல் அது. தொடுப்பு கிடைக்கவில்லை. அதுவும் இளையராஜாவின் தொடக்ககாலப் பாடல். கிடைத்தால் எனக்கும் கொடுக்கவும்.

ரவி, எங்கே பிடித்தீர்கள் இந்தப் படத்தை...கொள்ளையழகு...தமிழ்த்தாயின் தவச்செல்வி ஆண்டாளம்மாவின் காதல் ததும்பித் ததும்பிக் கண்ணன் மேல் பரவக் காணும் அரிய வதனம். உங்கள் அனுமதியின்றி சேமித்துக் கொண்டேன்.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடும் இன்பம் ஓங்குக.

G.Ragavan said...

குமரன்...இந்த ஓவியந்தானா...நீங்கள் சொன்ன அந்த ஓவியம். புரிந்தேன். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//SK said:
//கரைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையறு கழல் எனக்கு அளித்தவா//

சேர்த்துப் பாடுகையில் "எனக் களித்தவா" என வரும்!//

SK ஐயா - இதில் இருந்தே தெரிகிறது, நீங்க பாட்டை அணுவா அணுவா ரசிச்சுக் கேட்டிருப்பீங்க என்று!

//குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் //

இதைப் பாடும் போதும் அப்படியே குழைகள் ஆடுவது போலவே இருக்கும்; அத்தனை சொல்லாட்சி, இசையாட்சி இந்தப் பாடலில்!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பகீ said...
அருமையான பாடல். கேட்கும் போது மனம் இலேசாகிவிடும்//

வாங்க பகீ! நல்வரவு!
ஆமாம் பகீ, இன்னொன்னு கவனிச்சீங்களா? பாடல் தொடங்கும் போது கலகல என்று தொடங்கி, முடியும் போது இது தகுமோ முறையோ என்று சற்றே சோகமான பாட்டாகி விடும்! ஆனால் மீண்டும் அலை பாயுதே என்று வாசித்தவுடன் பழைய கலகல வந்து விடும் :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said...
குமரன்...இந்த ஓவியந்தானா...நீங்கள் சொன்ன அந்த ஓவியம். புரிந்தேன். :-)//

ஆகா,
குமரன் அடியேனுக்குச் சொல்லவில்லையே "அந்த" ஓவியம் "எந்த" ஓவியம் என்று!
என்னமோ விடயம் இருக்கு :-)

Anonymous said...

thangalin karuuthukal yellame arumai.

சிவமுருகன் said...

ஒன் ஸ்டாப் ஷாப் என்று சரியாத்தான் சொன்னீர்கள்.

மதுமிதா said...

'அலைபாயுதே கண்ணா' மிகவும் பிடித்த பாடல். எழுதியவரின் ரசனையை என்னவென்று மெச்சுவது.
இதை இங்கே வாசிக்காமல் போனால்தான் தப்பிக்க முடியும். இல்லையெனில் வேறு வேலை செய்ய இயலாது கண்ணனில் மூழ்கி விடவேண்டிய கட்டாயமாகிவிடும்.

கோவி.கண்ணன் [GK] said...

இரவி சங்கருக்கு பாராட்டுக்கள் !
மென்மையாக மனமயக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று ! புதிய அலைபாயுதே பாடலைவிட பாலமுரளி பாடிய அலைபாயுதே இன்னும் நன்றாகவே இருக்கும் !

நன்றி ! நன்றி ! நன்றி !

இந்த கோவர்தன கீதம் கோவிக்கும் பிடிக்கும் !!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//kala said...
thangalin karuuthukal yellame arumai.//

வாங்க கலா!
நன்றி!
அடியேன் கருத்து எதுவுமே இல்லை!
கண்ணன் கருத்தினால் அன்றி வேறேது?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சிவமுருகன் said...
ஒன் ஸ்டாப் ஷாப் என்று சரியாத்தான் சொன்னீர்கள்.//

நன்றி சிவமுருகன்!
ஒன் ஸ்டாப் ஷாப்=ஒரே நிறுத்தக் கடை?:-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுமிதா said...
இதை இங்கே வாசிக்காமல் போனால்தான் தப்பிக்க முடியும். இல்லையெனில் வேறு வேலை செய்ய இயலாது கண்ணனில் மூழ்கி விடவேண்டிய கட்டாயமாகிவிடும்//

என்ன மதுமிதா அக்கா, இப்படிச் சொல்லிட்டீங்க? எல்லா வேலையும் முடிச்சுட்டு, அப்பாடா என்று உட்காரும் போது பாருங்க! கண்ணன் நினைவு உங்களுக்கு வரப் போகுது! மூழ்கத் தான் போறீங்க :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் [GK] said:
புதிய அலைபாயுதே பாடலைவிட பாலமுரளி பாடிய அலைபாயுதே இன்னும் நன்றாகவே இருக்கும் !//

சிங்காரக் கண்ணனைப் பற்றிப் பாடினா
சிங்கைக் கண்ணனுக்கு ஒரே ஜாலி தானோ? :-))

கோவர்தன கோவியாரே
நேயர் விருப்பம் கூட கொடுங்க!
முடிஞ்ச வரை கண்ணன் பாட்டில் நிறைவேற்றுகிறோம்!!

மதுமிதா said...

///
kannabiran, RAVI SHANKAR (KRS) said:

//மதுமிதா said...
இதை இங்கே வாசிக்காமல் போனால்தான் தப்பிக்க முடியும். இல்லையெனில் வேறு வேலை செய்ய இயலாது கண்ணனில் மூழ்கி விடவேண்டிய கட்டாயமாகிவிடும்//

என்ன மதுமிதா அக்கா, இப்படிச் சொல்லிட்டீங்க? எல்லா வேலையும் முடிச்சுட்டு, அப்பாடா என்று உட்காரும் போது பாருங்க! கண்ணன் நினைவு உங்களுக்கு வரப் போகுது! மூழ்கத் தான் போறீங்க :-))
///

உண்மைம்மா
சதா கண்ணன் நினைவை சுமந்து கொண்டு திரிஞ்சா எப்படி தெளியறது:-)

ஞானவெட்டியான் said...

பாடல் கேட்டுப் பரவசமானேன்.
இனியென்ன சொல்ல?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஞானவெட்டியான் said...
பாடல் கேட்டுப் பரவசமானேன்.
இனியென்ன சொல்ல? //

அட, அடுத்து பரவசம் மிக ஆகுதே என்ற வரும் பாட்டைப் போட்டு விட வேண்டியது தான்! :-)
நன்றி ஞானம் ஐயா!!

Anonymous said...

First thank you for giving such a melodius and holy song for us.
When I heard this song, oh god sipmly i felt that myself beame a Siruvalliputhur Andal.
Great yaar
arun

Rodrigo Myles said...

//மதுமிதா said... இதை இங்கே வாசிக்காமல் போனால்தான் தப்பிக்க முடியும். இல்லையெனில் வேறு வேலை செய்ய இயலாது கண்ணனில் மூழ்கி விடவேண்டிய கட்டாயமாகிவிடும்// என்ன மதுமிதா அக்கா, இப்படிச் சொல்லிட்டீங்க? எல்லா வேலையும் முடிச்சுட்டு, அப்பாடா என்று உட்காரும் போது பாருங்க! கண்ணன் நினைவு உங்களுக்கு வரப் போகுது! மூழ்கத் தான் போறீங்க :-))

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP