Sunday, December 24, 2006

14. ஆயர்பாடி மாளிகையில்

பாடலை கேட்க இங்கே சொடுக்கவும் - கண்ணதாசன் எழுதி விஸ்வனாதன் இசையமைக்க எஸ்.பி. பாலசுப்ரமணியன் பாடியது


ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
(ஆயர்பாடி...)

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவனுறங்க மண்டலமே உறங்குதம்மா ஆராரோ மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
(ஆயர்பாடி...)




நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ
நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ
அவன் மோக நிலை கூட ஒரு யோக நிலை போலிருக்கும் யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ
(ஆயர்பாடி...)

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும் அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும் அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகைப் பார்ப்பதற்க்கும் போதை முத்தம் பெறுவதற்க்கும் கன்னியரே கோபியரே வாரீரோ கன்னியரே கோபியரே வாரீரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

வீரமணி ராதா படியதை கேட்க இங்கே சொடுக்கவும்.

மார்கழி 10 - நோற்றுச் சுவர்க்கம் - பத்தாம் பாமாலை

9 comments :

Kannabiran, Ravi Shankar (KRS) said...

எளிமையான தாலாட்டுப் பாடல் பாலாஜி; அதுவும் spb தேன் குரலில்!

நட்சத்திர வாரத்தில் போன தூக்கத்தை ஈடுகட்டத் தான் இந்தத் தாலாட்டா? :-)

SP.VR. SUBBIAH said...

கவியரசர் கண்ணதாசன் எழுதிய பல தாலாட்டுப் பாடல்களில் மிகவும் சிறப்பான தாலாட்டுப் பாடல் இது.

இறைவனுக்கே தாலாட்டுப் பாடல் எழுதுவதென்றால் - அதுவும் சிறப்பாக எழுதுவதென்றால் அதற்கு மகாகவி பாரதியாரையும், கவியரசர் கண்ணதாசனையும் தவிர வேறு யார் இருந்திருக்கிறார்கள் இன்றுவரை?

பதிவிட்டதற்கு பாராட்டுக்கள் மிஸ்டர் பாலாஜி
SP.VR.சுப்பையா

ஞானவெட்டியான் said...

//கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்//

கண்ணனாகிய கண்கள் தூங்கிவிட்டால் என்ன நடக்கும். உலகே, அண்ட சராசரமே உறங்கிவிடுமே! ஆதலால் துயில் எழுப்ப வாரும்.

இதுவும் திருப்பள்ளி எழுச்சிதானே?

G.Ragavan said...

மிகவும் நல்ல பாடல். மெல்லிசை மன்னரின் இனிய இசையில் கவியரசரின் பாடல்.

இந்தப் பாடலோடு தொடர்புடைய என்னுடைய வாழ்க்கை நிகழ்ச்சியை இங்கு கொடுத்திருக்கிறேன்.
http://gragavan.blogspot.com/2005/11/blog-post_113290519477808163.html

நாமக்கல் சிபி said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

எளிமையான தாலாட்டுப் பாடல் பாலாஜி; அதுவும் spb தேன் குரலில்!//

ஆமாம் KRS...
இது மிகவும் எளிமையான தாலாட்டு பாடல்... அதே நேரத்தில் எனக்கு பிடித்த மிக அருமையான பாடல்

//நட்சத்திர வாரத்தில் போன தூக்கத்தை ஈடுகட்டத் தான் இந்தத் தாலாட்டா? :-)//
:-))

நாமக்கல் சிபி said...

//SP.VR.சுப்பையா said...

கவியரசர் கண்ணதாசன் எழுதிய பல தாலாட்டுப் பாடல்களில் மிகவும் சிறப்பான தாலாட்டுப் பாடல் இது.

இறைவனுக்கே தாலாட்டுப் பாடல் எழுதுவதென்றால் - அதுவும் சிறப்பாக எழுதுவதென்றால் அதற்கு மகாகவி பாரதியாரையும், கவியரசர் கண்ணதாசனையும் தவிர வேறு யார் இருந்திருக்கிறார்கள் இன்றுவரை?

பதிவிட்டதற்கு பாராட்டுக்கள் மிஸ்டர் பாலாஜி
//
பாடலை கேட்டு ரசித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி சுப்பையா ஐயா...

குமரன் (Kumaran) said...

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திற ஏலோர் எம்பாவாய்

நோன்பு நோற்று சுவர்க்கம் புகப்போகும் அம்மையே! வாசற்கதவைத் திறக்காவிட்டாலும் பரவாயில்லை; பதில் கூடவா சொல்ல மாட்டாய்? நறுமணமுள்ள துளசியைத் திருமுடியில் அணிந்திருக்கும் நாராயணன், நம்மால் போற்றப்பட்டு நாம் விரும்பியதை அருள்வாள். அந்த புண்ணியனால் முன்னொரு நாள் மரணத்தின் வாயில் தள்ளப்பட்ட கும்பகரணனும் உன்னிடத்தில் தோற்று தனது பெருந்தூக்கத்தை உனக்குத் தந்துவிட்டானோ? எல்லையற்ற சோம்பலை உடையவளே. ஆனால் சிறந்தவளே. உறக்கம் நீங்கித் தெளிவுற்று வந்து கதவைத் திறப்பாய்.

வஜ்ரா said...

வீரமணி என்பவரா பாடினார். SPB என்று நினைத்தேன்.

குமரன் (Kumaran) said...

வஜ்ரா. எஸ்.பி.பி. பாடியதற்கான சுட்டி பதிவின் தொடக்கத்தில் இருக்கிறது. கடைசியில் இருக்கும் சுட்டி வீரமணி பாடியதற்கு.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP